பயத்தின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது… பீட்சா 4 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Pizza 4 Movie Official Motion Poster | தமிழ் சினிமாவில் திகில் கதையை மையமாக வைத்து பலப் படங்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதில் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்த வரிசையில் உள்ளது பீட்சா படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் பீட்சா. கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த பீட்சா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நடிகை ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்து இருந்தார். இந்த பீட்சா படம் விஜய் சேதுபதியின் சினிமா கெரியரில் மிகவும் முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பீட்சா படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹாரர் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தொடர்ச்சியாக தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வந்தது.
அதில் பீட்சா பாகம் இரண்டு படத்தை இயக்குநர் தீபக் சக்ரவர்த்தி எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு பீட்சா படத்தின் மூன்றாவது பாகம் படம் வெளியானது. அந்தப் படத்தை இயக்குநர் மோகன் கோவிந்த் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் அஸ்வின் ககுமானு நாயகனாக நடித்து இருந்தார்.




பீட்சா 4 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு:
இந்தப் படங்கள் அனைத்தும் வரிசையாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது 4-வது பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பீட்சா 4 படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீஸ் விஜய் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் தயாரிப்பாளரான சிவி குமார் படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Vijay Antony: நூறு சாமி பட கதையை சசி சார் சொல்லும்போதே அழுதுட்டேன் – விஜய் ஆண்டனி பேச்சு!
பீட்சா 4 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A new chapter of fear begins… 🍕🔥
The legacy continues as #Pizza4 is officially launched!
Get ready for a spine-chilling cinematic experience
Stay tuned for more updates! 👀
A @icvkumar Production
A @ThirukumaranEnt Production pic.twitter.com/8kqlORRsVW— Thirukumaran Entertainment (@ThirukumaranEnt) June 29, 2026
Also Read… மகுடம் படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகை அஞ்சலி சொன்ன அப்டேட்