SK-வின் படத்திலிருந்து எஸ்கேப்பான வெங்கட் பிரபு.. அடுத்த படம் இவருடனா?
Dhanush - Venkat Prabhu Alliance: பிரபல இயக்குநர்களின் வரிசையில் இருந்துவருபவர் வெங்கட் பிரபு. இவர் இறுதியாக தளபதி விஜய்யின் கோட் படத்தை இயக்கியிருந்த நிலையில், அதன் பின் சிவகார்த்திகேயனுடன் புது படத்தில் இணைந்ததாக கூறினார். தற்போது ஆபத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படும் நிலையில், யாருடன் புது படத்தில் இணைகிறாr என பார்க்கலாம்.
இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). இதில் முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் நாயகனாக (CM Vijay) நடித்திருந்தார். இப்படம் 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், தமிழில் அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) புதிய திரைப்படத்தில் இணைவதாக தெரிவித்திருந்தார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், இதன் டெஸ்ட் லுக் போட்டோஷூட் எல்லாமே நடைபெற்றிருந்தது.
ஆனால் தற்போது இப்படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் இயக்குநர் சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் சேயோன் (Seyon) என்ற படத்தில் திடீரென இணைந்த நிலையில், வெங்கட் பிரபுவின் படத்தின் ஷூட்டிங் தள்ளிபோனதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு வேறு நடிகரை வைத்து அந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது வேறுயாருமில்லை நடிகர் தனுஷ் தான்.




இதையும் படிங்க: ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
தனுஷை வைத்து புது படம் இயக்கும் வெங்கட் பிரபு :
இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது தனுஷை வைத்து புது படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படம் குறித்து தனுஷிடமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே கிட்டத்தட்ட 3 படங்களுக்கும் மேல் தொடர்ந்து ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது நடைபெறும் என தெளிவாக தெரியவில்லை. இந்த கூட்டணி படத்திற்கு முன் சிறிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: விஜய் டிவியில் தொடங்கிய ஆறு மாதத்திலே முடிவுக்கு வந்த சீரியல்.. அட இதுவா?
தனுஷ் மற்றும் வெங்கட் பிரபு படம் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:
SK is completely out of the Project 👀
– Now, #Dhanush is said to do a Film with Director #VenkatPrabhu 🔥
It’s going to be a 100% VP Film 🤝 pic.twitter.com/5KxVkaXqVq
— Movie Verse (@_MovieVerse) June 27, 2026
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உடனடியாக உருவாகும் படம்:
சிவகார்திகேயனுடனான படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் மற்றும் மிர்ச்சி சிவா உள்ளிட்ட நடிகர்களை கொண்டு சென்னை28 பாகம் 3 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான பணிகளில் அவர் இருப்பதாகவும் விரைவில், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் கிரிக்கெட் மற்றும் குடும்பத்தை மையமாக கொண்டு ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். மேலும் தற்போது இது தொடர்பான தகவல்களும் இணையத்தில் பரவிவருகிறது.