ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!
Suriya Gift Gold Chain To V.M. Mahalingam: சூர்யாவின் நடிப்பில் கடந்த மே மாதத்தில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் கருப்பு. இப்படத்தில் கருப்பா கூட வா மற்றும் ராத்து ராசன் போன்ற பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் வி.எம்.மகாலிங்கம். இவருக்கு கருப்பு பட வெற்றியின் காரணமாக சூர்யா தங்க சங்கிலியை பரிசாக வழங்கியிருக்கிறார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில், தி ஒன் சூர்யா (The One Suriya) நடித்திருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன், திரிஷா (Trisha), ஸ்வாசிகா, ஷிவதா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ் மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முழுக்க ஆக்ஷன் மற்றும் தெய்வீகமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, வேட்டை கருப்பசாமியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நிஜ கருப்பனே வந்தது போலவே சூர்யாவின் ஆக்ஷன் சண்டை மற்றும் நடன காட்சிகள் திரையரங்கையே தீப்பிடிக்க வைத்திருந்தது என கூறலாம். அவ்வாறு அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் அமைந்த நிலையில், இப்படத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இயக்குநர் முதல் இசையமைப்பாளர்கள் அனைவருக்கு சூர்யா விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருந்தார்.
அந்த வகையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கிளைமேக்ஸ் பாடல் கருப்பா கூட வா பாடலை பாடிய வி.எம்.மகாலிங்கத்திற்கு (VM.Mahalingam)பல லட்சம் மதிப்பிலான தங்க செயினை பரிசாக வழங்கியிருக்கிறார். இதை சமீபத்தில் மகாலிங்கம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி
சூர்யாவின் பரிசு குறித்து பாடகர் மகாலிங்கம் சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் பேசிய மகாலிங்கம், “சூர்யா சாரின் அன்பிற்கு எதுவும் ஈடில்லை. கருப்பு படத்தில் நான் பாடிய பாடல் பாடல்கள் மற்றும் கிளைமேக்ஸ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தின் தூணாக அதுவும் கருத்தப்பட்டிருந்தது. சூர்யா சாருக்கு ரொம்பவே நல்ல மனசு. அவர் எனக்கு சங்க செயினை பரிசாக கொடுத்திருந்தார். அவர் அவரின் உதவியாளரிடம் சொல்லி என்னை அழைத்திருந்தார்.
இதையும் படிங்க: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!
அப்போது நான் மற்றொரு நிகழ்ச்சியில் இருந்தேன். அதை முடித்துவிட்டு அவரை சந்திக்க சென்றேன். அப்போதுதான் கையில் தங்க சங்கிலியுடன் அவர் காத்திருந்தார். அவரை பார்த்த நான், கட்டிபிடித்துவிட்டு அவரை விடவே இல்லை. அதற்கு பிம் அவர் எனக்கு இந்த தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். அளித்து எனது மன நிலை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது” எமோஷனலாக அவர் பகிர்ந்துள்ளார்.
பாடகர் வி.எம்.மகாலிங்கத்தின் கருப்பு பட குறித்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
பாடகர் வி.எம்.மகாலிங்கம் கருப்பு படத்தில் ராத்து ராசன் மற்றும் கருப்பா கூட வா போன்ற இரு பாடல்களை பாடியிருந்தார். இந்த இரு பாடல்களும் தற்போதுவரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



