AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு பெண் ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது 12 வாரங்கள், அதாவது 3 மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. பிரசவத்துக்குப் பிறகு உடல்நலத்தை மீட்டெடுப்பதற்கும், பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கும் 3 மாத கால விடுப்பு போதுமானதாக இல்லை எனக் கூறி, விதிமுறையை மாற்ற வேண்டும் என்று பெண் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசு பெண் ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2026 20:17 PM IST

ஆகஸ்ட் 18, 2026: பெண் அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி. சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்கள் தங்களது முதல் இரண்டு குழந்தைகளுக்குத் தலா ஒரு ஆண்டு மகப்பேறு விடுப்பு பெறும் உரிமை பெற்றுள்ளனர்.

3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு:

ஆனால், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது 12 வாரங்கள், அதாவது 3 மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. பிரசவத்துக்குப் பிறகு உடல்நலத்தை மீட்டெடுப்பதற்கும், பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கும் 3 மாத கால விடுப்பு போதுமானதாக இல்லை எனக் கூறி, விதிமுறையை மாற்ற வேண்டும் என்று பெண் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் முழுமையாக 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நீதிமன்றத்தின் கருத்துகள் மற்றும் வழிகாட்டுதல்கள், பெண் அரசு ஊழியர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்றாவது குழந்தை என்பதால் பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் உடல்நலத் தேவைகளும், குழந்தையைப் பராமரிப்பதற்கான தேவைகளும் மாறிவிடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே சில வழக்குகளில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் விஜய்.. சகிக்க முடியவில்லை – உதயநிதியை தொடர்ந்து முரசொலியில் விமர்சனம்..

பெண் அரசு ஊழியர்கள் வரவேற்பு:

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பெண் அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதல் இரண்டு குழந்தைகளுக்கும் மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பில் இருந்த வேறுபாட்டை நீக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

சட்டப்பேரவையில் அமைச்சர் மேலும் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் தேர்வர்களுக்காக ‘வெற்றிப் பாதை’ என்ற செயலி உருவாக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்காக கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் கீழ் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் மையம் அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேம்படுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு மற்றும் கண்காணிப்பு அறை அமைக்கப்படும்.
  • ஏ மற்றும் பி அடிப்படைப் பயிற்சி மையம் மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் விடுதிகள், கலைக்கூடம் மற்றும் விருந்தினர் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • பவானிசாகர் அரசு அலுவலர்கள் பயிற்சி மையத்தில் நவீன கணினி மையம் அமைக்கப்படும்.
  • பவானிசாகர் பயிற்சி மையத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
    போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அறிவுசார் மையங்களுடன் இணைக்கப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கான இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டங்களில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இடம்பெறச் செய்யப்படும்.
  • ‘எளிய ஆளுமைத் திட்டத்தின்’ கீழ் 150 அரசு சேவைகள் கொண்டுவரப்படும்.

Follow Us