AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் அவினாஷ் – அக்‌ஷிதாவின் ஆட்டத்தை முடித்து வைத்த பிரித்வி – அஸ்மிதா… இது செம்ம ட்விஸ்ட்டா இருக்கே!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய கேமில் அஸ்மிதா மற்றும் பிரித்வியி கேம் ப்ளே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸில் அவினாஷ் – அக்‌ஷிதாவின் ஆட்டத்தை முடித்து வைத்த பிரித்வி – அஸ்மிதா… இது செம்ம ட்விஸ்ட்டா இருக்கே!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2026 13:09 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 4 வாரங்கள் முடிவடைந்து 5-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டேக் லைனுக்கு ஏற்ப இதுவரை சரியாகவே விளையாட தெரியவில்லை என்ற போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 4-வது வார இறுதியில் மூன்று பேர் வைல்கார்ட் போட்டியாளர்களாக வந்தனர். அதில் காமென் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரிஷ்மா மற்றும் டிடிஎஃப் வாசன், அக்‌ஷிதா ஆகியோர் உள்ளே வந்தனர். இதில் அக்‌ஷிதா சீரியல் நடிகையாக இருந்தாலும் அவரது அண்ணன் அவினாஷ் முன்னதாகவே பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு அதுவரை நட்பாக இருந்தவர்களுக்கு இடையே சண்டைகளும் சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பவர்கள் நட்பாகவும் பழகி வருவது நிகழ்ச்சியைப் பார்க்கும் போதே தெரிகின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் போட்டியாளர்களிடையே அதிக அளவில் போட்டி மனப்பான்மையை தூண்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவினாஷ் – அக்‌ஷிதாவின் ஆட்டத்தை முடித்து வைத்த பிரித்வி – அஸ்மிதா:

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு தற்போது இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இறுதிக் கட்டத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு நீள நிற செங்கல் கொடுக்கப்படுகின்றது. இதில் யாரிடம் 6 நீல நிற செங்கல் இருக்கிறதோ அவர்கள் மற்ற அணியில் இருந்து ஒரு அணியின் ஆட்டத்தை நிறுத்தி வைக்க முடியும் என்று தெரிவித்தனர்.

இதில் அஸ்மிதா – பிரித்வி அணியினரிடம் 6 செங்கல்கள் இருந்த நிலையில் அவர்கள் அக்‌ஷிதா மற்றும் அவினாஷின் ஆட்டத்தை நிறுத்தி வைப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடுவானம் போலவே – 19 ஆண்டுகளைக் கடந்தது இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Also Read… மேஜிக் போஷன் டாஸ்கில் ஒரே டீமில் மோதிக்கொள்ளும் முனியம்மாள் – முத்தழகி.. அடடே என்ன நடக்கு!

Follow Us