AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!

TN Eyal Isai Nataka Manram Chairman: தமிழ் சினிமாவில் பிரபல பாடகராகவும், பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் இருந்துவருபவர் மக்களிசை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் இன்று (05/10/2026) தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரும் தனது கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!
அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2026 19:40 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலின் பிரபலத்தின் மூலம் மீண்டும் அறியப்பட்டவர்தான் புஷ்பவனம் குப்புசாமி (Pushpavanam Kuppusamy). இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பாடகராக பல பாடல்களை பணியாற்றியுள்ளார். மேலும் முருகனுக்கான பக்தி பாடல்கள் என பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். மேலும் பொது நிகழ்ச்சிகளில் பேச்சாளராகவும், மக்களிசை கலைஞராகவும் பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இவ்வாறாக சினிமா, பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு விஷயங்களில் தனது பாணிகளை செய்துள்ளார். அந்த வகையில் இவரை தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் துறைகளில் ஒன்றாக இருந்துவரும் “இயல் இசை நாடக மன்றத்தின் (Eyal Isai Nataka Manram) தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்க்க நிலையில், சமீபத்தில் செயலர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனது கருத்தையும், தமிழக அரசிற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டைகர் முத்துவேல் பாண்டியனின் ஆட்டம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்!

தமிழக அரசுக்கு நன்றி கூறி புஷ்பவனம் குப்புசாமி பேசிய விஷயம்;

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அதில் “எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, இதுவரைக்கு இருந்த அரசு, எந்த அரசும், தமிழ் தமிழ் என்று பேசிய எந் அரசும் எனக்கு எந்த பதவியையும் கொடுக்கவில்லை. நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. மாண்புமிகு திரு விஜய் அவர்களுடைய அரசு, இந்த பதவியை தந்திருக்கிறது. இந்த இயல் இசை நாடக மன்ற தலைவராக என்னை நியமனம் செய்த மாண்புமிகு முதல்வர் திரு விஜய் அவர்க்ஜளுக்கும், கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

கிராமத்திலிருந்து வந்து, மக்கள் இசையில் பட்டம் பெற்ற என்னை இந்த பதிவியில் இருக்கும் நான், இயல் இசை நாடகம் போன்றவற்றில் இருக்கும் நலிந்த கலைஞர்களுக்கும் எங்களின் சிறப்பான சேவையை செய்வோம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் இருந்த அரசு தங்களுக்கு செய்த விஷயம் மற்றும் செய்யாத விஷயம் குறித்தும் அவர் அதில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமிக்கு பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் இவர் தனது பணியை சிறப்பாக செய்வேன் மற்றும் மூன்று துறையை சார்ந்த கலைஞர்களுக்கும் தன்னால் முடிவதை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

Follow Us