AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: டைகர் முத்துவேல் பாண்டியனின் ஆட்டம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்!

Jailer 2 Movie Trailer: கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துபவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் 172வது திரைப்படமாக, பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்று (05/10/2026) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Jailer 2: டைகர் முத்துவேல் பாண்டியனின் ஆட்டம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்!
ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Oct 2026 18:29 PM IST

கோலிவுட் சினிமா உலகமே இந்த 2026ம் ஆண்டில் அதிகமாக எதிர்பார்த்துவரும் திரைப்படங்களில் ஒன்றுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த திரைப்படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) ஹீரோவாக நடித்துள்ளார். ரஜினிகாந்தின் 172வது திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ளார். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் 1ன் (Jailer) படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த டைகர் முத்துவேல் என்ற வேடத்திலே நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), வித்யா பாலன் (Vithya Balan), சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இன்று (05/10/2026) ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர் எவ்வாறு இருக்கிறது:

ஜெயிலர் 2 படமானது பான் இந்திய கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. போன படத்தில் விநாயகனின் கதாபாத்திரம் லீட் வில்லனாக இருந்த நிலையில், இந்த ஜெயிலர் 2 படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடுவின் கதாபாத்திரம் ல்;லீட் வில்லனாக இருக்கிறது. இப்படமானது தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக அமைந்துள்ளது. இந்த படமும் ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாக இருக்கிறதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படத்திற்கு கிடைத்த சென்சார் அப்டேட்:

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷன் போன்ற பிரபலங்கள் சிறப்பான வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: பத்தா திரைப்படத்தின் வெற்றியால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகி காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு சென்சார் குழு ஏ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாம். அண்ட் விதத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும் என கூறப்படுகிறது.

Follow Us