AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Atlee: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உங்களிடம் கதை இருக்கிறதா? அட்லீ சொன்ன விஷயம்!

Atlee About Rajinikanth: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குநராக இருந்துவருபவர் அட்லீ குமார். இவரின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் பத்தா. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அட்லீ, ரஜினிகாந்துடன் படங்களில் இணைவது குறித்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Atlee: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உங்களிடம் கதை இருக்கிறதா? அட்லீ சொன்ன விஷயம்!
ரஜினிகாந்த் மற்றும் அட்லீImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2026 16:57 PM IST

கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் அட்லீ குமார் (Atlee Kumar). இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை உருவாக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) ராக்கா (Raaka) திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநராக அட்லீ இயக்கிவரும் நிலையில், பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக வெளியான தமிழ் திரைப்படம்தான் பத்தா (Baththa). இந்த படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஹீரோவாக நடிக்க, இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்குநராக இயக்கியிருந்தார்.

இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அட்லீ மற்றும் பத்தா படக்குழு கலந்துகொண்டனர். அந்த சந்திப்பில் பேசிய அட்லீ, ரஜினிகாந்துடன் படத்தில் பணியாற்றுவது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் காதலா? 8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்!

ரஜினிகாந்துடன் படத்தில் இணைய வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்து அட்லீ பேச்சு:

அந்த சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்துடன் நேர்காணல் படத்தில் இணைய வாய்ப்புகள் இருக்கிறதா? என கேட்டார். அதற்கு பதிலளித்த அட்லீ, “ஆம், என் படங்களை முடிக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு படம் வெளியாகும் வரை, நான் மற்ற படங்களைப் பற்றி யோசிப்பதோ அல்லது ஒப்புக்கொள்வதோ இல்லை. ஒரு படத்தை முடித்து வெளியிட்ட பிறகுதான், எனது அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்குவேன்.

இதையும் படிங்க: கைதி 2 படத்திற்கு அதிக சம்பளம் கேட்டேனா? – உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

பார்வையாளர்களின் வரவேற்பைப் பார்க்கக் காத்திருப்பேன், பிறகு வழக்கமாக என் கிராமத்தில் சுமார் இரண்டு மாதங்கள் செலவிடுவேன். அதன்பிறகு, எனது அடுத்த படத்தின் வேலையைத் தொடங்குவேன். எனவே, ராக்கா படத்திற்குப் பிறகு, எனது அடுத்த திட்டம் பற்றி யோசிப்பேன்” என அதில் தெரிவித்திருந்தார்.

ரஜினியுடன் படத்தில் இணையும் வாய்ப்பு குறித்து அட்லீ பேசிய வீடியோ பதிவு;

இயக்குநர் அட்லீ தற்போது ராக்கா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் பட ரேஞ்சில் உருவாக்கப்பட்டுவருகிறது. இதன் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us