Rashmika Mannndana: அவர் எதையும் கொண்டாடுவதில்லை.. கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து வெளிப்படையாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mannndana About Vijay Deverakonda: மக்கள் மத்தியில் பிரபலமான ரீல் மற்றும் ரியல் ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் ரணபாலி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், அதன் புரோமோஷன் பணிகள் நடக்கிறது. இதில் ஜோடியாக பேசிய நிலையில், அதில் விஜய் தேவரகொண்டா குறித்த முக்கியமான விஷயத்தை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
டோலிவுட் சினிமாவில் உண்மையான ஜோடியாக சினிமாவில் கலக்கிவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Manndana). இவர்கள் இருவருமே திரைப்படங்களில் ஒன்றாக நடிக்க ஆரம்பித்து, பின் காதலித்து தங்களின் திருமணத்தை செய்துகொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரியில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருமணம் முடிந்த கையேடு இந்த ஜோடியானது இணைந்த திரைப்படம்தாத்ன் ரணபாலி (Ranabaali). இப்படமானது கடந்த 1960-களில் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் (Rahul Sankrityan) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மீது அதீத ஆர்வம் இருக்கிறது.
அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் இப்படமானது வெளியாக காத்திருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் ஜோடியாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பேசிய ராஷ்மிகா விஜய் தேவரகொண் டாவை பற்றி யாரும் அறியாத விஷயம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மைல்ட்டிஸ்.. சைல்டிஸ்.. சைடிஸ்.. ரோப் டாஸ்க் போட்டியாளர்களை வகைப்படுத்திய அன்சர் – வைரலாகும் புரோமோ!
விஜய் தேவரகொண்டா குறித்து சுவாரஸ்யமான விஷயம் சொன்ன ராஷ்மிகா மந்தனா:
அந்த நேர்காணலில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, அதில் ” விஜய் தேவரகொண்டா எதையும் கொண்டாடுவதில்லை. ஆனால் நான் எல்லாவற்றையும் கொண்டாடவேண்டும் என விரும்புவாள். ஏனென்றால் ஒவ்வொரு பிறந்தநாளும் முக்கியமானது. நாம் வயதாகிக் கொண்டேதான் இருக்கிறோம், இந்த உலகில் நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று தெரியாது. அதனால், கொண்டாட்டம் மிகவும் முக்கியம் என்று நான் நினைத்தேன், ஆனால் அவருக்குக் கொண்டாட்டங்களில் ஆர்வம் இல்லை” என கூறினார்.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை 2 படம் இப்படிதான் உருவாகிறதா?
உடனே அருகிலிருந்த விஜய் தேவரகொண்டா, அதில் “ராஷ்மிகாதான் என் வாழ்வில் கொண்டாட்டத்தை கொண்டுவந்தால்” என தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ரணபாலி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
While we uncover a buried history and put it on the largest screens across the world.
Here is the story behind our Story, https://t.co/3Vm3qUfxhs
It is your story
It is my story
It is Our History.And we should#NeverForget#Ranabaali from Oct 16. pic.twitter.com/CjJnjPLkUA
— Vijay Deverakonda (@TheDeverakonda) October 2, 2026
இந்த ரணபாலி படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



