AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மைல்ட்டிஸ்.. சைல்டிஸ்.. சைடிஸ்.. ரோப் டாஸ்க் போட்டியாளர்களை வகைப்படுத்திய அன்சர் – வைரலாகும் புரோமோ!

Bigg Boss Tamil 10 Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 4வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், சனிக்கிழமையான இன்று (03/10/2026) விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திக்கும் நிலையில், காமெடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மைல்ட்டிஸ்.. சைல்டிஸ்.. சைடிஸ்.. ரோப் டாஸ்க் போட்டியாளர்களை வகைப்படுத்திய அன்சர் – வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Oct 2026 17:05 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியானதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 26 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் தற்போது 16 போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் ரோப் டாஸ்கில் (Rope Task) இருந்து குமரன் ரூ 5 லட்சத்துடன் வெளியேறிவிட்டார். அந்த விதத்தில் லக்ஷ்மி பிரியா இந்த போட்டியை தொடர்கிறார். இந்நிலையில் தற்போது ஜாவித் – தன்யா மற்றும் அஸ்மிதா – சவன்யா போன்ற 4 பேர் இன்னும் அந்த ரோப் டாஸ்கில் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்தில் இந்த 4 போட்டியாளர்களின் யார் வெளியேறுவரை என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் 4வது வாரத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சியானது இருக்கும் நிலையில், பல நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நகைச்சுவையாக பேசியது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர் அன்சர் ரோப் டாஸ்க்கில் இருக்கும் போட்டியாளர்களை எவ்வாறு வகைப்படுத்தியிருந்தார் என்பது தொடர்பான புரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை 2 படம் இப்படிதான் உருவாகிறதா?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 27வது நாளில் வெளியான 2வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த புரோமோவில் அன்சர், ரோப் டாஸ்க்கில் இருக்கும் ஜோடி போட்டியாளர்களை வகைப்படுத்தி தெரிவித்திருந்தார். அந்த பதிவில் அவர், குமரன் மற்றும் லக்ஷ்மி பிரியா இருவரும் மைல்ட்டிஸ் என்றும், தன்யா மற்றும் ஜாவித் சைல்டிஸ் என்றும், அஸ்மிதா மற்றும் சாவன்யா இருவரும் சைடிஸ் என்றும் அதில் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு விஜய் சேதுபதி சிரித்தபடியே இருந்த புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இன்று பிக்பாஸிலிருந்து வெளியேறும் 2 பேர் யார்? வைரலாகும் புரோமோ வீடியோ

பிக் பாஸ் சீசன் 10ல் இந்த வாரம் நுழையும் வைல்ட் கார்ட் என்ட்ரி :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் மொத்தம் 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைகிறார்களாம். ஏற்கனவே கடந்த வாரம் எலிமினேட்டான 3 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், அதை தொடர்ந்து தற்போது இந்த வாரத்தில் மொத்தம் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைகிறார்களாம். இந்த வாரத்தில் அக்ஷிதா ஷாக், டிடிஎப் வாசன் மற்றும் காமன் மேன் ஷோ போட்டியாளர் க்ரீஷ்மா போன்ற போட்டியாளர்கள் நுழையவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. மேலும் 5வது வாரத்தின் தொடக்கத்தில் மேலும் இந்த நிகழ்ச்சியானது பரபரப்பாக என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us