AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mammootty: டோரதி பட திரையரங்கு வரவேற்பு.. படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய மம்முட்டி!

Mammootty Praises Karthik Subbarajs Dorothy Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குநராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இயக்கத்தில் டோரதி படமானது வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில், இப்படக்குழுவை மலையாள ஸ்டார் மம்முட்டி நேரில் அழைத்து பாராட்டியயுள்ளார்.

Mammootty: டோரதி பட திரையரங்கு வரவேற்பு.. படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய மம்முட்டி!
டோரதி திரைப்படக் குழுவைப் பாராட்டிய மம்மூட்டி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Oct 2026 15:49 PM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டடைவரும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் சூர்யா (Suriya) முதல் தனுஷ் (Dhanush) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டோரதி (Dorothy). இதை கார்த்திக் சுப்புராஜ் நாயகனாக இயக்க, மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரிஷிகாந்த் (Rishikanth), சனந்த் (Sananth) மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) இசையமைக்க, சிறப்பாக பாடல்கள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்படத்தை பல்வேறு நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும் பாராட்டிவருகின்றனர். அந்த விதத்தில் மலையாள சினிமாவின் உச்ச பிரபலமான மம்முட்டி (Mammootty) , இப்படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான பதிவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

டோரதி படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய மம்முட்டி குறித்த எக்ஸ் பதிவு:

மம்முட்டி வாழ்த்தியது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்த விஷயம்:

அந்த பதிவில் கார்த்திக் சுப்புராஜ், “சார், உங்கள் நேரத்திற்கும், நன்றிக்கு, டோரதி குறித்த உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி, இது எனக்கு மிகவும் முக்கியமானது சார், நீங்கள் எப்போதும் ஒரு உத்வேகம் சார்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் மம்முட்டி, கார்த்திக் சுப்புரா, சனந்த் மற்றும் ரிஷிகாந்த் போன்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியிருந்தார். இது குறித்த பதிவு இணையத்தில் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் கதைச்சுருக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்

டோரதி திரைப்படத்திற்கு மக்களின் வரவேற்பு:

இந்த டோரதி படமானது நட்பு, திருநங்கை சமுதாயத்தின் கதை மற்றும் ஒரு திருநங்கையின் கதையை மையப்படுத்தி இப்படமானது உருவாக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் இப்படமானது வெளியான ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் கிடைத்திருந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படக்குழுவை மலையாள பிரபல நாயகன் மம்முட்டியும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us