AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dorothy: 90ஸ் கிராமப்புற கேங்ஸ்டர் மசாலா.. மீண்டும் கோட்டை விட்டாரா கார்த்திக் சுப்புராஜ்? டோரதி படம் எப்படி இருக்கு?

Dorothy Movie Review: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் டோரதி. இப்படம் இன்று (25/09/2026) உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் விமர்சனங்கள் மற்றும் இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என விவரமாக பார்க்கலாம்.

Dorothy: 90ஸ் கிராமப்புற கேங்ஸ்டர் மசாலா.. மீண்டும் கோட்டை விட்டாரா கார்த்திக் சுப்புராஜ்? டோரதி படம் எப்படி இருக்கு?
டோரதி திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Sep 2026 14:40 PM IST

கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவர் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) படத்தை இயக்கியிருந்த நிலையில், இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 10வது திரைப்படமாக உருவாகியிருந்ததுதான் டோரதி (Dorothy). கார்த்திக் சுப்புராஜ் இயக்க, இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது என கூறலாம். இப்படத்தில் நடிகர் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது 90ஸ் காலகட்டத்தில் கிராமப்புறத்தில் நடக்கும் சமூக வன்முறையை மையமாக கொண்ட ஒரு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அந்த விதத்தில் இன்று (25/09/2026) இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து பட பூஜை..!

சனந்த் மற்றும் ரிஷிகாந்த்தின் டோரதி படம் எப்படி இருக்கு:

இந்த டோரதி படமானது 1990-களில் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் நடக்கும் ஒரு துணிச்சலான மற்றும் வழக்கத்திற்கு மாறான காலகட்ட நாடகம். சாதிப் பிரிவினைகள், கும்பல் வன்முறை, நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள பழமைவாத உலகம் ஆகியவற்றால் அவர்களின் பிரிக்க முடியாத நட்பு குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டள்ளது. மேலும் டோரதி (கீர்த்தி சுரேஷ்) வருகையால் அந்த இருவரின் நட்பு எவ்வாறு மாறுகிறது என்பதை பற்றிய கதையாகும்.

டோரதி படத்தில் நடிகர்களின் நடிப்பு எவ்வாறு உள்ளது:

சுப்புவாக சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிப் பலம் வாய்ந்த நடிப்பை வழங்கிய நடிகர் சனந்த், இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். கார்த்தி கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் அவருக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துகிறார், மேலும் அந்த இரு நண்பர்களுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தின் உணர்வுப்பூர்வமான முதுகெலும்பாக அமைகிறது.

இதையும் படிங்க: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் மலேசியாவில் தடை.. காரணம் என்ன?

டோரோதி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நுட்பமாகவும் திறம்படவும் நடித்துள்ளார். தன்னைச் சுற்றியுள்ள உலகை படிப்படியாக மாற்றும் ஒரு கதாபாத்திரத்திற்கு அவர் அரவணைப்பு, இரக்கம் மற்றும் உணர்வுப்பூர்வமான ஆழத்தைக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் படத்தின் சில பாலின விவாதங்கள் (LGBTQ) குறித்தும் பேசப்பட்டுள்ளது.

கிளைமேக்சில் கோட்டை விட்டாரா கார்த்திக் சுப்புராஜ்:

இப்படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு நம்பகத்தன்மையாக இல்லை, அது மனதில் ஆழமாகப் பதியவில்லை. இது அனைவருக்கும் பிடித்தமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் கார்த்திக்சுப்பராஜ் இதில் வித்தியாசமாக ஒன்றை முயற்சித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் படம் பிடித்தவர்கள் மற்றும் வித்தியாசமான 90ஸ் கதைக்களம் கொண்ட படத்தை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் இப்படத்தை பார்க்கலாம்.

Follow Us