அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
Jason Sanjay recent interview | தமிழ் சினிமாவில் நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜயின் மகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜேசன் சஞ்சய். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விஜயின் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாக கூறி உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த தளபதி விஜய் தற்போது 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து தற்போது முதலமைச்சராக உள்ளார். தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆவதற்கு முன்பே தளபதி விஜய் இனி படங்களில் நடிக்கபோவதில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் சினிமாவை விட்டு விலகிய நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முன்னதாக தளபதி விஜயின் நடிப்பி வெளியான வேட்டைக்காரன் படத்தில் அப்பா உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் ஜேசன் சஞ்சய். சிறு வயதில் அவர் தனது தந்தையுடன் ஒரே திரையில் தோன்றியது குடும்பத்தினருக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள சிக்மா படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை:
அந்தப் பேட்டியில் ஜேசன் சஞ்சய் கூறியதாவது, நான் அப்பாவின் பத்ரி 2 படத்தை உருவாக்க விரும்புகிறேன். அந்தப் படத்தில் ஒரு சிக்மா பாணி உணர்வு இருக்கிறது. யாரும் நம்பாத ஒரு சாதாரணமான நாயகன், இறுதியில் தன் சகோதரனுக்காக நீதியை நிலைநாட்டி, ஒரு குத்துச்சண்டை வீரராக உருவெடுப்பதுதான் அதன் கதைக்களம். இது மக்களுடன் எளிதில் ஒன்றிப்போகக்கூடிய ஒரு கதையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களுடன் ஒரு பிணைப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




Also Read… ஓடிடியில் சாதனைப் படைத்த விஸ்வநாத் & சன்ஸ் படம்… மகிழ்ச்சியில் படக்குழு – வைரலாகும் போஸ்ட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
நான் பத்ரி 2 படத்தை உருவாக்க விரும்புகிறேன். அந்தப் படத்தில் ஒரு சிக்மா பாணி உணர்வு இருக்கிறது. யாரும் நம்பாத ஒரு சாதாரணமான நாயகன், இறுதியில் தன் சகோதரனுக்காக நீதியை நிலைநாட்டி, ஒரு குத்துச்சண்டை வீரராக உருவெடுப்பதுதான் அதன் கதைக்களம். இது மக்களுடன் எளிதில் ஒன்றிப்போகக்கூடிய ஒரு கதையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களுடன் ஒரு பிணைப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… டோரத்தி படம் எப்படி இருக்கும்? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்