AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்… திணறிய எதிரணி தலைவர் ராகவ் – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் ஜேசன். இவர் இன்று எதிரணி தலைவர் ராகவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்… திணறிய எதிரணி தலைவர் ராகவ் – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Sep 2026 10:52 AM IST

தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 17 நாட்களைக் கடந்து 18-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸ்குகள் கடுமையாகவும் பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் விதமாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டின் லீடராக அவினாஷ் தேர்வாகி உள்ள நிலையில் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாகவும் வீட்டில் சலசலப்புகள் நிலவு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ராபிட் டாஸ்க் ஒன்று நடைப்பெற்றது. அந்த டாஸ்கில் வெற்றிபெறும் போட்டியாளர் நாமினேசனில் இருந்து தப்பிக்கும் நிலையில் அடுத்ததாக நடைப்பெற்ற ட்ராமா டாஸ்கில் சரியாக பங்கெடுக்காத சுவாரஸ்யம் குறைவான நபர்களாக வீட்டின் லீடரால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆனந்தி, முனியம்மா மற்றும் முகேஷ். இவர்களில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்:

இந்த நிலையில் இன்று 18-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் எதிரணியில் இருக்கும் ராகவ் மற்றும் ஆளும் அணியில் இருக்கும் ஜேசன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. மேலும் சரியாண காரணங்கள் இல்லாமல் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜேசன் கராராக பேசுவது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜேசனைப் பார்த்து துப்பிய ஷமா – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ராதாவுக்கு தங்கம்னாலே வீக்னஸ் – அம்பிகா சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு

Follow Us