இன்று தேசிய விருதினை பெறும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார்? எந்தப் படத்திற்காக தெரியுமா?
72 National Film Awards 2026 Winners List Tamil Cinema | கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி 2026-ம் ஆண்டு இந்திய சினிமாவில் 2024-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளைப் பெரும் படங்கள் மற்றும் பிரபலங்கள் யார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்திய சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல மொழிகளில் தொடர்ந்து பல நூறு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அப்படி இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய படங்கள் மற்றும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்படக் கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேசிய விருதையும் வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது திரைத்துறையினருக்கு வளங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த தேசிய திரைப்பட விருது 2024-ம் ஆண்டிற்கான பட்டியல் கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி 2026-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமா உட்பட பல மொழிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படி இந்திய மொழிகளில் விருது வென்ற படங்கள் மற்றும் படக்குழுவினருக்கு இன்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து யார் விருதினை வெள்ள உள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இன்று தேசிய விருதினை பெறும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார்?
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் தனுஷ் ராயன் படத்திற்காக சிறந்த தமிழ் பட விருதினை பெருகிறார். அதனைத் தொடர்ந்து வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் விருதினை பெறுகிறார். மேலும் அமரன் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி விருதினை பெருகிறார். இவர்கள் மட்டும் இன்றி நடிகர்கள் சாச்சனா நமிதாஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் இன்று தேசிய திரைப்பட விருதினை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Also Read… சிவகார்த்திகேயனின் நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது
72-வது தேசிய திரைப்பட விருது விழாவின் நேரடி ஒளிபரப்பு:
Also Read… Rashmika Mandanna: மைசா படத்திற்காக எனது வாழ்க்கையையே கொடுத்தேன் – ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!