இந்த ஆள பழிவாங்கனும் ஒருநாள் நினைத்தேன்… ஷாருக்கானை பற்றி நினைத்தேன் நகைச்சுவையாக பேசிய விஜய் சேதுபதி!
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல Vijay Sethupathi about Shah Rukh Khan | நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக பத்தா படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் குறித்து விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி பிறகு நாயகன்களின் நண்பனாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி மற்ற மொழிப் படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வந்தார். இவர் நாயகனாக நடித்தாலும் அவ்வபோது படங்களில் வில்லனாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பத்தா. இந்தப் படத்தினை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிகர் ஷாருக்கான் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஷாருக்கானை பற்றி நினைத்தேன் நகைச்சுவையாக பேசிய விஜய் சேதுபதி:
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவரோ ஷாருக் கானின் தீவிர ரசிகையாக இருந்தார். அதனால், என்றாவது ஒரு நாள் அவரிடம் (ஷாருக் கானிடம்) பழிவாங்குவேன் என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆச்சரியப்படும் விதமாக, அந்த கனவு இப்போது நிஜமாகிவிட்டது. என்னால் இதை இன்னும் நம்பவே முடியவில்லை. நான் நடித்தபோது, அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிட்டதால், அவருடன் நேருக்கு நேர் மோதுவது போன்ற உணர்வு எனக்குள் உண்மையாகவே ஏற்பட்டது. நடிப்பின்போது கதையையும் கதாபாத்திரங்களையும் நான் முழுமையாக நம்புவதால், அந்தச் சண்டைக்காட்சி எனக்கு முற்றிலும் உண்மையானதாகவே தோன்றியது குறிப்பிடத்தக்கது.
Also Read… 2வது பெண் குழந்தைக்கு அம்மாவான தீபிகா படுகோன் – குவியும் வாழ்த்து
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VijaySethupathi about a Fun Revenge Story on #ShahRukhKhan
– When I was in college, I had a crush on a girl, but she was a huge fan of Shah Rukh Khan. I used to joke that I would get my revenge on him someday. Surprisingly, that dream has actually come true.
– I still couldn’t…— Movie Tamil (@_MovieTamil) September 19, 2026
Also Read… Rashmika Manndana: ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா.. மைசா பட ப்ரீ டீசரை வெளியிட்ட படக்குழு!