AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எப்போது? முழுமையான விவரம் இதோ

இந்திய சினிமாவில் சிறந்த கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகளை கௌரவிக்கும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக தேசிய திரைப்பட விருதுகள் கருதப்படுகின்றன. இந்த நிலையில் 2026 செப்டம்பர் 22ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்க உள்ளார்.

72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எப்போது? முழுமையான விவரம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Sep 2026 17:57 PM IST

இந்திய சினிமாவில் சிறந்த கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகளை கௌரவிக்கும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக தேசிய திரைப்பட விருதுகள் கருதப்படுகின்றன. கடந்த 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகளை ஆண்டுதோறும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கி வருகிறது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மொழிகள், மாநிலங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த திரைப்படங்கள் இந்த விருதுகள் மூலம் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய திரைப்பட விருதுகள் முக்கியமாக 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அவை சிறந்த திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், திரைப்படம் குறித்த விமர்சனங்களுக்கான விருதும் அடங்கும். இதனுடன் இந்திய சினிமாவுக்கான வாழ்நாள் சாதனையை கவுரவிக்கும் தாதா சாகேப் பால்கே தனி உயரிய விருதாக வழங்கப்படுகிறது.

72வது தேசிய திரைப்பட விருதுகள்

கடந்த 2024 ஆம் ஆண்டில் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளின் வெற்றியாளர்கள் கடந்த 2026 ஜூலை 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் 2026 செப்டம்பர் 22ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரில் நடைபெறும் விழாவில் விருதுகளை வழங்க உள்ளார்.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் டெல்லிக்கு வெளியே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இனி வரும் ஆண்டுகளில் தேசிய திரைப்பட விருது விழா நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்படும் வகையில் மத்திய அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us