AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ajith Kumar: வெற்றி வெற்றி வெற்றி… பார்சிலோனா கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!

Ajith Kumar Shines : கோலிவுட் சினிமாவில் ஹீரோவாக இருந்து, தற்போது இந்தியவாய் முன்னிறுத்தும் கார் ரேஸ் வீரராக இருப்பவர் அஜித் குமார். இவர் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் குமாரின் அணியானது 2வது இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Ajith Kumar: வெற்றி வெற்றி வெற்றி… பார்சிலோனா கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!
அஜித் குமார் கார் பந்தயம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Sep 2026 18:08 PM IST

நடிகர் அஜித் குமார் தற்போது “ரெட் அன்ட்” (Red Ant) என்ற கார் ரேஸ் (Car race) அணியில் போட்டியாளராக இருந்துவருகிறார். இந்த அணியானது பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் லண்டனில் (London) நடைபெற்றிருந்த ஏசியன் லெ மான்ஸ் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த கார் ரேஸை தமிழக முதல்வர் விஜய் தொடங்கிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகும் பல ரேஸ் போட்டிகளில் அஜித்தின் அணியானது கலந்துகொண்டுவருகிறது.

இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்றிருந்த பார்சிலோனா 24h கார் ரேஸில் (Barcelona 24h car race), அஜித் குமாரின், ரெட் அன்ட் ரேஸ் அணி கலந்துகொண்டுள்ளது. இந்த ரேஸில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் மற்றும் 33 நிமிடங்களுக்கும் மேலாக அஜித் ரேஸ் செய்திருந்தார். அந்த வகையில் தற்போது இந்த போட்டியில் அஜித்தின் அணியானது 2வது இடத்தை பிடித்து வென்றுள்ளது. இது குறித்த பதிவை சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பல உண்மை கதைகளை மையமாக கொண்ட கதை.. மீசையமுறுக்கு 2 படம் பற்றி பேசிய ஹிப்ஹாப் ஆதி!

பார்சிலோனா கார் ரேஸில் அஜித் குமாரின் அணியானது 2வது இடத்தை பெற்றது குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் சுரேஷ் சந்திரா, “தேசம் பெருமை கொள்கிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா கார் ரேஸில் அஜித் வெற்றிபெற்றது குறித்த வீடியோ பதிவு:

பார்சிலோனா கார் ரேஸில் அஜித்தின் அணி பெற்ற வெற்றி:

இந்த கார் ரேஸில் அஜித் குமாரின் அணியானது 2வது இடத்தை பெற்றிருந்த நிலையில், இந்திய தேசிய கோடியை ஏந்தியவாறே மேடையில் அஜித் சென்றிருந்தார். மேலும் மேடையில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடவும் விதத்தில் ஒயின் பாட்டிலை பொங்கவிட்டு தனது மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்கியிருந்தார்.

இதையும் படிங்க: 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எப்போது? முழுமையான விவரம் இதோ

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அஜித் குமார் இதுவரை கிட்டத்தட்ட 6 போட்டிகளில் கோப்பைகளை வென்றுள்ளார். அதில் 2வது இடத்தை பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு பிறகு அஜித் குமார், டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us