Scene: முரட்டு வசூல்… 5 நாட்களில் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் உலகளாவிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
Scene Movie 5 Days Collection: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரை ரசிகர்கள் தி ஒன் என்றும் அன்போடு அழைத்துவருகிறார்கள். இவரின் சீன் திரைப்படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6ம் தேதியில் வெளியானது. இந்நிலையில் இப்படம் 5 நாட்கள் முடிவில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக மக்களால் கொண்டாடப்பட்டுவரும் முன்னணி நடிகர்தான் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமாக 47 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் 47வது திரைப்படமாக வெளியாகியிருக்கும் படம்தான் சீன் (Scene Movie). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்கியுள்ள நிலையில், ஜோதிகா – சூர்யா தங்களின் ழகரம் ஸ்டூடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா (Nazriya) நடித்திருந்தார். இப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
நகைச்சுவை, திரில்லர் மற்றும் வித்தியாசமாக இப்படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் உருவாக்கியிருந்தார். 2026 நவம்பர் 6ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியான நிலையில், 5 நாட்கள் முடிவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்தில் அனிருத் இல்லையா? இதுதான் காரணமா?
5 நாட்கள் முடிவில் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் மொத்த வசூல்:
இந்த சீன் படத்தில் நடிகர் சூர்யா ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாகவும், கண் தெரியாத நபராகவும் நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரமான இன்பராஜ் மக்கள் மத்தியில் சிறப்பாகவே வரவேற்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள நிலையில், நஸ்ரியா சிறப்பான வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை தோற்றங்களா? வைரலாகும் தகவல்
மேலும் மலையாள இளம் நடிகர் நஸ்லென் இப்படத்தில் ஈஸ்வரன் என்ற மெயின் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படமானது, 5 நாட்கள் முடிவில் உலகமெங்கும் சுமார் ரூ 205 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சூர்யாவின் சீன் திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
#SCENE Rampage at the Box-office!
205 CR+ Collection Worldwide 💥Running Successfully in Cinemas Now!
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @RakenduMouliv @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SakthiFilmFctry @NVRCinema @MMovies4u @vkfilmsrelease @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar @pro_sabari @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 11, 2026
ஹாட்ரிக் ரூ 200 கோடி வசூலில் கெத்து காட்டும் சூர்யா:
இந்த 2026ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மட்டுமே கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியானது. கடந்த 2026 மே மாதத்தில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு திரைப்படம், ஆகஸ்ட் மாதத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் மற்றும் தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் திரைப்படம். ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.