AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இயக்குநர் அட்லி எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

Director Cibi Chakravarthy | தமிழ் சினிமாவில் பிரபலமான இயகுநராக வலம் வருகிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் பத்தா பட விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இயக்குநர் அட்லி குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் அட்லி எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
சிபி சக்ரவர்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Sep 2026 13:40 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான டான் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். நடிகர் சிவகார்திகேயன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் சுமார் 4 ஆண்டுகள் ஆகியும் அடுத்தப் படத்தை இயக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அவருக்கு சட்ட சிக்கல் ஒன்று ஏற்பட்ட காரணத்தால் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி படத்தை இயக்குவதில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவில்லை என்ற செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவர் எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் பத்தா பட விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் அட்லி எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி:

அட்லீ எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு அமையவிருந்தது, ஆனால் அது கைநழுவிப் போனது. அந்தச் சூழல் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. அப்போது அவர் என்னை அழைத்துப் பேசியது மிகவும் உணர்வுபூர்வமான தருணமாக இருந்தது. “நீங்கள் ஒரு பிளாக்பஸ்டர் (பெரும் வெற்றிப் படங்களை இயக்கும்) இயக்குனர்; மனம் சோர்ந்துவிடாதீர்கள்” என்று அவர் கூறினார். “உங்கள் வார்த்தைகள் எனக்குப் புதிய உத்வேகத்தை அளித்தன, சார். எனது அடுத்த படத்தின் மூலம் உங்களைப் பெருமைப்படுத்துவேன். கடின உழைப்பைத் தாண்டி, உங்கள் மனதின் தூய்மையே முக்கியமானது. நீங்கள் தொடும் எந்தவொரு விஷயமும் மிகப்பெரிய வெற்றியை அடையும், சார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… Jason Sanjay: உங்க அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு குணம் என்ன? விளக்கமான சொன்ன ஜேசன் சஞ்சய்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது திரிஷா இல்லனா நயன்தாரா படம் – கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us