Dharman: தர்மன் பட 3வது ஷெட்யூல் ஷூட்டிங்கில் இணைந்த ரஜினிகாந்த்.. அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ!
Dharman Movie Shooting: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் தர்மன். இந்த படத்தின் 3வது கட்ட ஷூட்டிங் ரஜினிகாந்த் இணைந்துள்ளதாக அஸ்வத் மாரிமுத்து பதிவை வெளியிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் (Super Star) என அழைக்கப்பட்டுவரும் நாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. மேலும் இதற்கு பிறகு ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் தர்மன் (Dharman).
இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் 2வது பட ஷெட்யூல் நிறைவடைந்த நிலையில், தற்போது 3வது கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக தொடங்கியுள்ளதாகவும், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: ஒரு கத சொல்லட்டுமா… தங்களின் சொந்த வாழ்க்கை கதையை சொன்ன போட்டியாளர்கள் – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!
தர்மன் திரைப்படத்தின் 3வது கட்ட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இணைந்துள்ளதாக அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ:
Back with Thalaivar for Dharman 3rd schedule 🔥#superstar@RKFI pic.twitter.com/dMowuKe2t9
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) September 16, 2026
அந்த பதிவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “தர்மன் 3வது கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் தலைவருடன்” என அதில் அவர் கூறியுள்ளார். இந்த காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ராஷி கன்னாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராஜமௌலியுடன் வேலை செய்த எனது சக நடிகர்கள் என்னை பயமுறுத்தினார்கள் – மகேஷ் பாபு!
தர்மன் திரைப்படத்தின் வில்லன் யார் தெரியுமா?:
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டராக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறாராம். மேலும் அவனுடன் நடிகை ராஷி கண்ணா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அந்த விதத்தில் இவருடன் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடிக்கும் ராம் பொத்தினேனி நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.