AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரஜினிகாந்தின் தர்மன் பட செகண்ட் ஷெட்யூல் ஓவர் – வைரலாகும் வீடியோ!

Dharman Movie Shooting: தலைவர் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகிவருவது தர்மன். இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாம். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரஜினிகாந்தின் தர்மன் பட செகண்ட் ஷெட்யூல் ஓவர் – வைரலாகும் வீடியோ!
ரஜினிகாந்தின் தர்மன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Sep 2026 11:35 AM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) இயக்குநர் கே.பாலசந்தரால் சினிமாவில் நாயகனாக நுழைந்த இவர், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நாயகனாகவே படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 படத்திலும் இணைந்து நடித்தார். இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த வரிசையில் ரஜினிகாந்த் நடிப்பில் 173வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் தர்மன் (Dharman). இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Maarimuthu) இதை இயக்கும் நிலையில், இதில் ரஜினிகாந்த் டாக்டராக நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாவதுக்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்ட நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வெற்றிமாறனின் பர்த்டே.. ராஜன் வகையறா பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த கென் கருணாஸ்!

ரஜினிகாந்தின் தர்மன் படத்தின் ஷூட்டிங் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தர்மன் படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும்:

இந்த தர்மன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கிறார். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் மருத்துவராக எந்த படங்களிலும் நடித்ததில்லை, அந்த விதத்தில் இப்படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா போன்றவர்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். மேலும் இதில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இதில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைப்பு சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: அரசன் கோலிவுட்டையும் பெருமைப்படுத்தும்… சிலம்பரசனின் நெகிழ்ச்சி பேச்சு!

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன், உறவுநிலை மற்றும் பல்வேறு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். இப்படத்தை 2027ம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதை முன்னிட்டு 2026ம் ஆண்டு நவம்பர் இறுதிக்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Follow Us