AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர் டிரெய்லர் – எங்கெல்லாம் தெரியுமா?

Ajith’s Gladiators Trailer Update : நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படத்தின் டிரெய்லர் வருகிற செப்டம்பர் 6, 2026 ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இந்த டிரெய்லர் குறிப்பிட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர் டிரெய்லர்  – எங்கெல்லாம் தெரியுமா?
அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2026 20:52 PM IST

நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படத்தின் டிரெய்லர் வருகிற செப்டம்பர் 6, 2026 ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இந்த டிரெய்லர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர் டிரெய்லர்

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித்குமார், சிறிய இடைவேளை விட்டு அவரது கனவான கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அஜித்குமார் ரேஸிங் என்ற டீமை உருவாக்கியுள்ள அவர் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். அதில் சில போட்டிகளில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் தொடர்பாக ஊடகங்களை சந்திக்காத அஜித், தனது கார் ரேஸிங் பயணம் தொடர்பாக அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : கார்த்தியின் சர்தார் 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!

கடந்த 2 வருடங்களாக கார் ரேசிங்கில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் அவரது வெற்றிகள் உள்ளிட்ட பல அம்சங்களை தனது கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான அறிவிப்பு

 

இந்த நிலையில் இந்தப் ஆவணப்படத்தின் டிரெய்லர் வருகிற செப்டம்பர் 6, 2026 அன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது. மேலும் இந்த டிரெய்லர் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அவரது படத்தை காணாத ரசிகர்களுக்கு இந்த டிரெய்லர் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரித்துள்ளார்.

இதையும் படிக்க : சூர்யாவின் 48வது படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர் – வைரலாகும் வீடியோ!

வெளியாகும் திரையரங்குகளின் விவரம்

இந்த டிரெய்லர் சென்னையில் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம், கோயம்பேடு ரோகினி திரையரங்கம், சென்னை வடபழனி கமலா திரையரங்கம், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம், திருநெல்வேலி ராம் திரையரங்கம், மதுரை ரிட்ஸ் ஷா திரையரங்கம், கோயம்புத்தூர் கேஜி திரையரங்கம், சேலம் ஆஸ்கர் திரையரங்கம், கும்பகோணம், காசி திரையரங்கம், சிதம்பரம் லேனா திரையரங்கம், புதுச்சேரி ரத்னா திரையரங்கம், திருவாரூர் ஜே ஸ்கொயர் திரையரங்கம், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கம், தஞ்சாவூர் ஶ்ரீபதி திரையரங்கம், கடலூர் நியூ சினிமாஸ், வேலூர், விஷ்ணு சினிமாஸ், திருச்சி மெகா ஸ்டார், எல்ஏ சினிமாஸ், திருவண்ணாமலை சக்தி சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow Us