AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மோட்டோர் ஸ்போர்ட்ஸ் நகரம் – முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்

Ajith Praises Vijay’s Motorsports Push: தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் அஜித் தெரிவித்துள்ளார்.

மோட்டோர் ஸ்போர்ட்ஸ் நகரம் – முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்
முதல்வர் விஜய் - அஜித் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Sep 2026 21:10 PM IST

சென்னை, செப்டம்பர் 3 : தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அஜித், முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்

மேலும், மோட்டார்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான கவனத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளை அறிவித்த தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : நாமக்கல்லில் கொடூர சாலை விபத்து.. ஒரே நேரத்தில் 4 மாணவிகள் பரிதாப பலி!

மேலும் பேசிய அவர், தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள ஒருவனாக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வாசகத்தை நான் இவ்வாறு மாற்றிக் கூற விரும்புகிறேன், தமிழக அரசு எடுத்து வைக்கும் ஒரு சிறிய அடி, இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மிகப்பெரிய விளையாட்டாக மாறும். இதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் செப்டம்பர் 3, 2026 இன்று பேசிய முதல்வர் விஜய், மிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில், தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்திப் பிரிவுகள் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றன.

விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்துவரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழகத்தை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும்.

இதையும் படிக்க : தடுப்புகளை மீறி பாய்ந்த குடும்பம்.. முதல்வர் விஜய்யின் வாகனத்தை மறித்து போராட்டம்.. பெரும் பரபரப்பு!

இந்த நகரத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம் மற்றும் அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேசத் தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதுடன், விளையாட்டுச் சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமையும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us