AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தடுப்புகளை மீறி பாய்ந்த குடும்பம்.. முதல்வர் விஜய்யின் வாகனத்தை மறித்து போராட்டம்.. பெரும் பரபரப்பு!

Chief Minister Joseph Vijay Vehicle : சென்னையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் வாகனத்தை மறித்து போலீசார் விசாரணையில் உயிரிழந்த இளஞைர் ஆகாஷ் டெலிசனின் குடும்பத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்புகளை மீறி பாய்ந்த குடும்பம்.. முதல்வர் விஜய்யின் வாகனத்தை மறித்து போராட்டம்.. பெரும் பரபரப்பு!
முதல்வர் வாகனத்தை மறித்து போராட்டம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 03 Sep 2026 17:52 PM IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆகாஷ் டெலிஷன் என்ற இளைஞர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு உயிர் இழந்தார். காவல்துறையினர் தனது மகனை அடித்து கொன்று விட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தனது வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகன அணிவகுப்பை ஆகாஷ் டெலிசனின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடற்கரை சாலையில் இன்று வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 3- ஆம் தேதி) நடைபெற்றது. அப்போது, முதல்வருடன் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில், முதல்வர் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

தடுப்புகளை மீறி பாய்ந்த ஆகாசின் குடும்பத்தினர்

யாரும் எதிர்பாராத நிலையில், நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, முதல்வர் விஜயின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் கோட்டையின் நுழைவு வாயில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் இருந்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோர் திடீரென தடுப்புகளை தாண்டி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த முதல்வரின் கான்வாய் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மேலும் படிக்க: “புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி!”.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!!

காவல் நிலையத்தில் ஆகாசின் பெற்றோரிடம் விசாரணை

இந்த சம்பவத்தை எதிர்பாராத பொதுமக்கள் மற்றும் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் சத்தம் போட்டனர். தொடர்ந்து, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் விசாரணக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞர் போலீசாரின் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவரை போலீசார் கொடூரமாக தாக்கிய நிலையில் கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை

அங்கு, சிகிச்சை பலனின்றி இளைஞர் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதில், காவல் மரணம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆகாஷ் டெலிசன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் தொடர்புடைய 6 போலீசார் ஆதிச்ச சாதியை சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 90% சதவிகித முதுகு தண்டுவட பாதிப்பு… கடின உழைப்பால் சென்னை ஐஐடியில் இடம் பிடித்த மாணவர்

Follow Us