Viral Video : இடுப்பளவு வெள்ள நீரில் திருமணம் செய்த ஜோடி.. பிலிப்பைன்ஸில் சுவாரஸ்ய சம்பவம்!
Philippines Couple Got Married In Waist Height Water | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜோடி ஒன்று இடுப்பளவு தேங்கி இருக்கும் வெள்ள நீரில் திருமணம் செய்துள்ளது.
சமூக ஊடகங்களின் உதவியால் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத, சில ஆசாத்தியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், ஜோடி ஒன்று இடுப்பளவு தண்ணீரில் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்ககலாம்.
இடுப்பளவு வெள்ள நீரில் நடைபெற்ற திருமணம்
கடும் மழை, வெள்ளம், புயல் ஆகிய இயற்கை பேரிடர் காலங்களில் திருமணங்களை தள்ளிப்போடுவது வழக்கமானதாக உள்ளது. ஆனால், பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜோடி ஒன்று கடும் மழையில், இடுப்பளவு தேங்கியிருக்கும் மழை நீரில் திருமணம் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Watch Video: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
𝐕𝐈𝐃𝐄𝐎: 𝐏𝐡𝐢𝐥𝐢𝐩𝐩𝐢𝐧𝐞 𝐂𝐨𝐮𝐩𝐥𝐞 𝐇𝐨𝐥𝐝𝐬 𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧 𝐅𝐥𝐨𝐨𝐝𝐞𝐝 𝐂𝐡𝐮𝐫𝐜𝐡
Credit: Facebook| Ang Tinig – St. John the Baptist Parish Hagonoy, Bulacan
—
Follow us for more breaking news and videos pic.twitter.com/aIcmatCSLO— Punch Newspapers (@MobilePunch) September 1, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பிலிப்பைன்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அங்குள்ள ஆலையம் ஒன்றில் கனமழை காரணமாக இடுப்பளளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் அந்த ஜோடி அங்கேயே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, இடுப்பளவு வெள்ள நீரில் வெள்ளை உடை அணிந்து மணமகள் நடந்து வர அந்த திருமணம் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ரயில் தண்டவாளத்தில் சாவகாசமாக நடந்துச் சென்ற சிறுத்தை குட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிகவும் பேசுபொருளாக உள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.