Viral Video : காலாவதியான சாக்லேட், உணவு பொருட்கள்.. போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
Public Collected Expired Chocolates From Garbage | உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் குப்பையில் கொட்டப்பட்டு இருந்த காலாவதியான சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருட்களை அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் செல்வது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கான்பூரின், பன்கி பகுதி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகுந்த பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோவில் ஏராளமான பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதியில் குவிந்து கிடப்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் கூடியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவர்கள் அந்த குப்பையில் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருட்களை எடுப்பதற்காக அந்த பகுதியில் குவிந்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
காலாவதியான சாக்லேட்களை அள்ளிச் செல்ல குவிந்த பொதுமக்கள்
உத்தரபிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், கான்பூர் (Kanpur) பகுயில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் காலாவதியான சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.




இதையும் படிங்க : Viral Video : பாம்பு கடித்த பெண்ணுக்கு பேய் ஓட்டியதால் அதிர்ச்சி.. வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
यूपी : कानपुर में किसी ने एक्सपायरी चॉकलेट, टॉफी, बिस्किट के डिब्बे कूड़े के ढेर पर फेंक दिए। लोग उन्हें भी उठाकर ले गए। pic.twitter.com/Hd8vfZVixg
— Sachin Gupta (@Sachingupta) August 25, 2026
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் குப்பை கொட்டும் இடம் ஒன்றில் அட்டை பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் ஏராளமான சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காலாவதியானதால் அந்த குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. அது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்துச் சென்று சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : வீட்டின் கேட்டிற்குள் நுழைந்த ராட்சத மலைப்பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும் பகீர் வீடியோ!
காலாவதியான பொருட்களை உட்கொண்டால் உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயம் உள்ள நிலையில், அந்த பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் செல்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.