AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : காணாமல் போன செருப்பை கண்டுபிடிக்க உதவிய சாட்ஜிபிடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Man Used ChatGPT to Find His Lost Pair Of Shoes | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், சாட்ஜிபிடியை பயன்படுத்தி காணாமல் போன தனது செருப்பை கண்டுபிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : காணாமல் போன செருப்பை கண்டுபிடிக்க உதவிய சாட்ஜிபிடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Aug 2026 19:43 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் சில சுவாரஸ்யமாகவும், சில ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், தொலைந்துப்போன செருப்பை சாட்ஜிபிடி மூலம் தேடி கண்டுபிடித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன செருப்பை கண்டுபிடிக்க உதவிய சாட்ஜிபிடி

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் செயலிகளான சாட்ஜிபிடி உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் கூட்டத்தில் காணாமல் போன செருப்பை சாட்ஜிபிடி உதவியுடன் கண்டுபிடித்தது தொடர்பான வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கைகளை குப்பி கெஞ்சிய பெண் – ரயிலை நிறுத்திய ஓட்டுநர்.. வைரலான வீடியோவால் எழுந்த விவாதம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Shubhang Borkar (@shubhangborkar)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் காணாமல் போன தனது செருப்பை கூட்டத்தில் தேடிக்கொண்டு இருக்கிறார். எவ்வளவு நேரம் தேடியும் செருப்பு கிடைக்காததன் காரணமாக அவர், சாட்ஜிபிடியிடம் உதவி கேட்கிறார். அதாவது, அவர் கலைந்து கிடக்கும் செருப்புகளை புகைப்படம் எடுத்து சாட்ஜிபிடியிடம் கேட்கிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சாட்ஜிபிடி அவருக்கு செருப்பை கண்டுபிடித்து கொடுக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரேப்பிடோ டிரைவர் என கூறி பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்த நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, சிலர் சாட்ஜிபிடியின் செயல்திறன் குறித்து பதிவிட்டாலும், சிலர் மனிதர்கள் தங்களது மூளையை பயன்படுத்துவதில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us