Viral Video : தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Pitbull Dog Brutally Attacked Couple | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தம்பதியை பிட்புல் நாய் ஒன்று கடித்து குதறுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதியை பிட்புல் நாய் ஒன்று கடித்து குதறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய் – அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான சிக்கல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் மட்டுமன்றி, வீட்டு நாய்கள் மூலமும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் தம்பதி வாடகை வீடு பார்க்கச் சென்ற நிலையில், அங்கிருந்த பிட்புல் ரக நாய் ஒன்று அவர்களை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க : ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
⚠️ DISTURBING VISUALS
Husband and wife out house-hunting in Patiala mauled by a pit bull after it slipped out of the very property they had come to see in Ghuman Nagar
Even the owner and neighbours appeared helpless trying to stop the attack
They’ve suffered multiple bite… pic.twitter.com/4epQfJgs72
— Nabila Jamal (@nabilajamal_) August 12, 2026
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தம்பதி இருவர் வாடகை வீடு பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் ஒரு வீட்டின் முன்பு நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுடன் மற்றொரு நபரும் உள்ளார். அவர்கள் வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டு இருக்கும் நிலையில், வீட்டின் கேட்டை திறந்து பெண் ஒருவர் வருகிறார். அவர் அழைத்து வரும் நாய், முதலில் தம்பதியில் மனைவியை கடிக்கிறது. அதனால் அவர் கத்தி கதறுகிறார்.
இதையும் படிங்க : Viral Video : இந்தியா சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளில் முதல் முறையாக கிராமத்திற்கு வந்த பேருந்து.. கொண்டாடிய கிராம் மக்கள்!
அவரை காப்பாற்ற அந்த பெண்ணின் கணவர் முயற்சி செய்யும் நிலையில், அவரையும் அந்த நாய் கடித்து குதறுகிறது. இவ்வாறு கணவன் மற்றும் மனைவியை அந்த நாய் மிக கொடூரமாக கடித்து குதறுகிறது. பிறகு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் வந்து அந்த நாயை தாக்க தொடங்கிய நிலையில், அது கடிப்பதை நிறுத்துகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.