Viral Video : ரேப்பிடோ டிரைவர் என கூறி பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்த நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Man Posses Like A Rapido Driver | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சாலையில் நின்றுக்கொண்டு இருந்த பெண் ஒருவரிடம், ஒருவர் தான் ரேப்பிடோ ஓட்டுநர் என கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், சாலையில் நின்றுக்கொண்டு இருந்த பெண் ஒருவரிடம், ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லவா என கோரியது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேப்பிடோ டிரைவரை போல நடித்த நபர்
பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயண தேவைகளுக்காக ஓலா, ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெருமளவு பெண்கள் தான் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், சாலையில் நின்றுக்கொண்டு இருந்த பெண் ஒருவரிடம் ஒருவர் தான் ரேப்பிடோ ஓட்டுநர் என கூறி டிராப் செய்யவா என கேட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க : Viral Video : கிணற்றில் அங்கும் இங்கும் அலைமோதும் தண்ணீர்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரவு 9 மணிக்கு சாலையில் நின்றுக்கொண்டு இருந்த தன்னிடம் ஒருவர் நான் உங்களை டிராப் செய்யவா என கேட்டார். எனக்கு அவர் மீது சந்தேகம் வந்த நிலையில், நான் அவரிடம் ரேப்பிடோ ஓட்டுநர் ஐடியை கேட்டேன். அதற்கு அவர் ஓட்டுநர் ஐடியை காட்டினார். நான் அவரிடம் கேட்ட பிறகு தான் அவர் பிளே ஸ்டோரில் இருந்து ரேப்பிடோ செயலியை பதிவிறக்கம் செய்தார்.
இதையும் படிங்க : Viral Video : ஆபத்தான முறையில் டேமை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. ஒவ்வொரு தூண்களாக தாவிச் செல்லும் வீடியோ வைரல்!
நான் எப்போதும் ரேப்பிடோவில் தான் பயணம் செய்வேன். பாதுகாப்பாக உணருவேன். ஆனால், இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அச்சமடைய செய்வதற்காக நான் பதிவிடவில்லை, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பதிவிடுகிறேன். நீங்களும் ஆட்டோவில் வாகனத்தில் ஏறுவதற்கு முன்னதாக ரேப்பிடோ ஐடியை கேட்டு உறுதி செய்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.