AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்.ஜி.ஆர் பாடலை பாடி முதல்வரை பாராட்டிய நிதி அமைச்சர்.. தலை குனிந்து சிரித்த முதலமைச்சர் விஜய்..

“ஒரு கதை சொல்லியாச்சு, ஒரு கவிதை சொல்லியாச்சு. இன்னும் ஒரு பாட்டு மட்டும் பாடிக்கொள்கிறேன்” எனக் கூறிய அவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்து, “கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம். மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்” எனப் பாடியபடி முதலமைச்சர் விஜயை கை காட்டி பாராட்டினார்.

எம்.ஜி.ஆர் பாடலை பாடி முதல்வரை பாராட்டிய நிதி அமைச்சர்.. தலை குனிந்து சிரித்த முதலமைச்சர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Aug 2026 19:26 PM IST

ஆகஸ்ட் 12, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நிதியமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சர் விஜயை கவிதை, குட்டிக்கதை மற்றும் பாடல் மூலம் பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இன்றைய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதன் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், தனது உரையின்போது குட்டிக்கதை ஒன்றை கூறினார்.

குட்டிக்கதை சொன்ன அமைச்சர் மரிய வில்சன்:

அவர் கூறிய குட்டிக்கதையில், நாட்டை அடுத்து யார் ஆள வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதற்காக முதியவர் ஒருவர் போட்டி ஒன்றை நடத்துகிறார். அந்தப் போட்டியில் பங்கேற்ற மூன்று பேருக்கும் தலா ஒரு நெல் விதையை வழங்கி, அதை முளைக்க வைத்து கொண்டு வருபவருக்கே நாட்டை ஆளும் பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறுகிறார்.

மேலும் படிக்க: சுதந்திர தினம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த வழிகளில் பயணிக்கலாம்?

மூன்று மாதங்களுக்குப் பிறகு, இரண்டு பேர் விதையை முளைக்க வைத்து கொண்டு வந்த நிலையில், ஒருவர் மட்டும் விதை முளைக்கவில்லை எனக் கூறுகிறார். இதையடுத்து, அந்த முதியவர் விதை முளைக்காதவரே போட்டியின் வெற்றியாளர் என அறிவிக்கிறார். இதனால் ஆச்சரியமடைந்த மற்ற இருவரிடம், தான் கொடுத்தது வேக வைத்த நெல் விதை என்றும், அது முளைக்காது என்றும் முதியவர் விளக்குகிறார்.

பொய் சொல்லாமல், குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர்மையாக இருந்ததற்காகவே அந்த நபர் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “எல்லாமே இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி” என முதலமைச்சர் விஜயை குறிப்பிட்டு பேசினார்.

எம்.ஜி.ஆர் பாடலை பாடி முதல்வரை புகழ்ந்த அமைச்சர்:


தொடர்ந்து சட்டப்பேரவையில் கவிதை ஒன்றையும் குறிப்பிட்ட அமைச்சர், பின்னர் ஒரு பாடலையும் பாடி முதலமைச்சர் விஜயை பாராட்டினார்.

“ஒரு கதை சொல்லியாச்சு, ஒரு கவிதை சொல்லியாச்சு. இன்னும் ஒரு பாட்டு மட்டும் பாடிக்கொள்கிறேன்” எனக் கூறிய அவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்து, “கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம். மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்” எனப் பாடியபடி முதலமைச்சர் விஜயை கை காட்டி பாராட்டினார்.

மேலும் படிக்க: பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!

தலை குனிந்து சிரித்த முதல்வர்:

அமைச்சரின் இந்தப் பாராட்டை கேட்ட முதலமைச்சர் விஜய், தலை குனிந்தவாறு அமைதியாக சிரித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், “எங்கள் அண்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பற்றி எம்.ஜி.ஆர். அப்போதே பாடியிருக்கிறார்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அமைச்சரின் பேச்சின்போது தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Follow Us