“போதையில்லா கோவை!”.. 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!!
போதையில்லா கோவை – ஆரோக்கியமான கோவை' என்ற உயரிய நோக்கில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. விஜிஎம் மருத்துவமனை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறையுடன் இணைந்து நடத்திய இந்த ஓட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
கோவை, ஆகஸ்ட் 09: இன்றைய சூழலில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. போதைப்பழக்கம் தனிநபரின் வாழ்க்கையை மட்டுமின்றி சமூகத்தையும் சீரழிக்கும் ஆற்றல் கொண்டது. இதனைத் தடுக்கும் வகையிலும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், “போதையில்லா கோவை – ஆரோக்கியமான கோவை” என்ற உயரிய இலக்கை முன்வைத்து கோவையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
Published on: Aug 09, 2026 12:51 PM
Follow Us
