இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்.. அசத்தும் கோவையின் தேசியக் கொடி தயாரிப்பு மையம்!!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கைமுறையாக ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் தயாரிக்கப்படும் இக்கொடிகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மட்டுமின்றி இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுப் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.
கோவை, ஆகஸ்ட் 09: இந்தியா ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 79 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2026 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் தனது 80-வது சுதந்திர தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது. தேசியப் பண்டிகையான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில், நாட்டின் சுதந்திர அடையாளமான முவர்ணத் தேசியக் கொடிகளைத் தயாரிக்கும் பணிகள் தமிழகத்தின் தொழிலும் நகரமான கோவையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவையில் இயங்கி வரும் பாரம்பரிய ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனங்கள் இரவும் பகலுமாகச் செயல்பட்டுத் தேசியக் கொடிகளைத் தயாரித்து வருகின்றன.
Published on: Aug 09, 2026 01:27 PM
Follow Us
Latest Videos
