அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்திய H1B விசாதாரர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கலிபோர்னியா செனட்டர் அலெக்ஸ் படில்லா புதிய குடியேற்றச் சீர்திருத்த மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வசித்து வரும் தகுதியான குடியேற்றவாசிகள், H1B விசாதாரர்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து பெற்றவர்கள் உள்ளிட்ட சுமார் 80 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு பெற மாற்று வழி உருவாகலாம்.