ஓடும் ரயிலின் ஏசி பெட்டிக்குள் பயணி ஒருவர் தீபம் மற்றும் ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேல்படுக்கையில் அமர்ந்திருந்த அந்த பயணி தீபம் ஏற்றி வழிபாடு செய்தபோது, புகை பரவியதால் மற்றொரு பயணி அதை தடுத்து, இதனால் ஏற்படும் தீ விபத்து அபாயம் குறித்து எச்சரித்தார்.