அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தின் அன்பில் அவன் படத்தின் போஸ்டர் வெளியானது
Anbil Avan Movie First Look Poster Viral On Social Media | நடிகர் அசோக் செல்வன் தனது 23-வது படத்தில் தற்போது நடித்து முடித்து உள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். அந்த வகையில் நடிகர் அசோக் செல்வன் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அசோக் செல்வனின் 23-வது படமான அந்தப் படத்தை இயக்குநர் கார்த்திகேயன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் போஸ்டர் வெளியானது:
இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அசோக் செல்வனின் 23-வது படத்திற்கு அன்பில் அவன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவும் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இது ஒரு ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமாவாக இருக்கும் என்று வீடியோவைப் பார்க்கையில் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு
அன்பில் அவன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Some stories begin with a meeting.
Some begin with a feeling.
And some begin with a love that refuses to be ordinary.Presenting the first look of #AnbilAvan ❤️
In theatres, September 2026
Starring @AshokSelvan @PreityMukundan.
Directed by… pic.twitter.com/cFKcKRHPzX— Ayngaran International (@Ayngaran_offl) August 12, 2026