செல்லங்களா ரெடியா… தொடங்கியது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங்!
Vishwanath And Sons Movie Ticket Booking Open Now | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026-ம் சினிமா கெரியரில் மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கருப்பு படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




தொடங்கியது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங்:
தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இயக்குநர் வெங்கி அட்லூரியின் முதல் சம்பளம் இத்தனை லட்சமா? வைரலாகும் வீடியோ
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sanjay Vishwanath has arrived 💥
Now it’s your turn to bring the whole family to the theatres ❤️#VishwanathAndSons Bookings Open Now 🥳🥳🥳#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli @NimishRavi… pic.twitter.com/lA68Pn0QQJ
— Sithara Entertainments (@SitharaEnts) August 11, 2026
Also Read… மீண்டும் இணைகிறது வந்தியத்தேவன் – குந்தவை காம்போ.. வைரலாகும் தகவல்!