AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தள்ளிபோகிறதா அரசன் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

Is the shooting of the movie 'Arasan' being postponed | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் அடுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தள்ளிபோகிறதா அரசன் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2026 15:11 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தக் லைவ் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் அரசன்.

இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் வட சென்னை படத்தின் கதாப்பாத்திரங்களும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தள்ளிபோகிறதா அரசன் படத்தின் ஷூட்டிங்?

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி சிலம்பரசன் சென்னைக்குத் திரும்பிவிட்டார். ஆனால் அரசன் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. படக்குழுவினர் தற்போது அதற்கான திட்டமிடலில் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளனர். எனினும், விஷயங்கள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சற்று யோசித்துப் பாருங்கள் வெற்றிமாறனின் படத்திற்குப் பிறகு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது அடுத்த படத்தைத் தொடங்க சிம்பு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது, ​​அவர் ரஜினிகாந்தின் தர்மன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Yash: நீங்க ஒரு லேடி சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவை பாராட்டிய யாஷ்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வேட்டைக்காரன் படத்தில் அப்போவோட டான்ஸ் ஆடிய தருணம் – ஜேசன் சஞ்சயின் வைரல் பேச்சு

Follow Us