AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yash: நீங்க ஒரு லேடி சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவை பாராட்டிய யாஷ்!

Yash Hails Nayanthara: சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்தவர் யாஷ். இவரின் டாக்ஸிக் பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வில் பேசிய யாஷ், நடிகை நயன்தாராவை வெகுவாக பாராட்டியுள்ளார். டாக்ஸிக் படத்தில் நயன்தாராவின் நடிப்பு மற்றும் அவரின் கதை கதாபாத்திரம் தேர்வு குறித்து பேசியுள்ளார்.

Yash: நீங்க ஒரு லேடி சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவை பாராட்டிய யாஷ்!
நயன்தாராவைப் பாராட்டிய யாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Aug 2026 18:24 PM IST

பான் இந்தியா கொண்டாடும் ராக்கிங் ஸ்டாராக இருந்துவருபவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் இறுதியாக கேஜிஎப் 2 (KGF 2) படமானது வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் யாஷ் நடித்துவந்த புது திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இதை இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் யாஷ் டிக்கெட் மற்றும் ரயா என இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு இணையான வேடத்தில் நடிகை கியாரா அத்வானி (kiara Advani) மற்றும் நயன்தாரா (Nayanthara) இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்த படம் அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு சமீபத்தில், டாக்ஸிக் பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய யாஷ், நடிகை நயன்தாராவின் நடிப்பை புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 300 வருடம் வாழும் ஒரு வேம்பையர்.. இம்மார்டல் படத்தின் கதை இப்படிதான் இருக்கும் – ஜி.வி.பிரகாஷ் குமார் ஓபன் டாக்!

நயன்தாராவின் நடிப்பை புகழ்ந்து பேசிய நடிகர் யாஷ்:

அந்த மேடையில் பேசிய யாஷ், நயன்தாரா, “உங்களுக்கு எனது நன்றிகள், இந்த படத்தில், உங்கள் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கொண்டுவந்துள்ளீர்கள். ந்தப் படத்திற்காக நீங்கள் செய்த அனைத்தையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் ஒரு “லேடி சூப்பர் ஸ்டார்”, மேலும் உங்கள் சொந்தப் படங்களை உருவாக்கும் திறமை உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதும், உங்கள் ரசிகர்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

இதையும் படிங்க: மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகிறது – நடிகர் சூர்யா

தேதிப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், இந்தப் படத்தில் நடிக்க நீங்கள் முன்வந்தீர்கள், அது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. இந்தப் படத்தில் நீங்கள் மிகவும் அட்டகாசமாக நடித்திருக்கீர்கள். இதுபோன்ற அட்டகாசமான சகோதரி யாருக்குமே கிடைச்சிருக்கமாட்டாங்க, அதுபோலவே இப்படத்தில் உங்கள் கதாபாத்திரமும் அட்டகாசமாக இருக்கு” என அதில் அவர் புகழ்ந்துள்ளார்.

நயன்தாரா குறித்து நடிகர் யாஷ் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

யாஷின் டாக்ஸிக் பட ட்ரெய்லர் வெளியாகி தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் வெளியாகி இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படம் கேஜிஎப் படத்திற்கும் மேல் அதிக வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us