300 வருடம் வாழும் ஒரு வேம்பையர்.. இம்மார்டல் படத்தின் கதை இப்படிதான் இருக்கும் – ஜி.வி.பிரகாஷ் குமார் ஓபன் டாக்!
GV Prakashs Immortal : தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் படம் இம்மார்டல். இப்படத்தை கதை எவ்வாறு இருக்கும் என்பதை அண்மையில், ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
சவுத் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் தென்னிந்திய மொழி படங்களில் இசையமைப்பாளராக தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இவர் நடிகனாக கடந்த 2015ம் ஆண்டு முதல் படங்களில் நடித்துவரும் நிலையில், இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கத்தில் நடித்துவந்த புது திரைப்படம்தான் இம்மார்டல் (Immortal). இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டிலே நடைபெற தொடங்கிய நிலையில், 2026ம் ஆண்டு மே இறுதியில் நிறைவடைந்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஜி.வி.பிரகாஷ், இம்மார்டல் படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஒன்னு நெனச்சா பத்து நடக்கும்… இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 புரோமோ!
இம்மார்டல் திரைப்படத்தின் கதைக்களம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்த விஷயம்:
ஜி.வி. பிரகாஷ் குமார் அந்த பேட்டியில், “இம்மார்டல் திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படம், வேம்பையரை மையமாக கொண்ட ஒரு திரைப்படம்.எந்த படத்தின் கதை எப்படி என்றால், ஒரு நபர் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேல் வாழுகிறார் என்பது போன்ற கதை. இப்படம் ஒரு சுவாரஸ்யமான, மர்மமான திரில்லர் கதையை போன்ற புது விதமான படம். இந்த படத்தின் இயக்குநர் சிஜி (CG) வேலைகளை சிறப்பாக செய்துள்ளார். இந்த படமானது பல்வேறு இடங்களை கொண்ட ஒரு சிறப்பான கதைக்களம் பற்றிய படம். படம் சூப்பராக வந்திருக்கிறது” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணி படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!
இம்மார்டல் திரைப்படத்தின் 2வது பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
She is the reason. She is the melody. ❤️#SheIsMy, the second single from #Immortal, releases today at 6 PM.
In theatres on September 4th.
Starring : @gvprakash & @11Lohar
Produced by: @arun_kumaroffl @AKfilmfactory
Directed by: @DirMari_Chinna@SamCSmusic pic.twitter.com/Sj6igTHhwJ— Mariyappan Chinna (@DirMari_Chinna) July 27, 2026
இப்படம் ஆரம்பத்தில் ஜூலை 23ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் ஜன நாயகன் பட வெளியீட்டின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிவரும் நிலையில், இப்படம் ஜி.வி பிரகாஷ் குமாருக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.