AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலிஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!

Nivin Paulys Bethlehem Kudumba Unit: மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் புதிதாக உருவாகியுள்ள படம்தான் பெத்லகேம் குடும்பா யூனிட். மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலிஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
பெத்லஹேம் குடும்பா யூனிட் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jul 2026 14:57 PM IST

தென்னிந்திய சினிமாவில் அதிரடி நாயகனாக மக்கள் மத்தியில் பிரபலபமானவர் நடிகர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் இறுதியாக சர்வம் மாயா (Sarvam Maaya) என்ற படத்திலோ நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் நிவின் பாலி, பிரீத்தி முகுந்தன் மற்றும் ரியா ஷிபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதன் வெற்றியை அடுத்தக்க பிரேமலு பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி (Girish A.D) இயக்கத்தில், நிவின் நடித்துவந்த படம்தான் பெத்லகேம் குடும்பா யூனிட் (Bethlehem Kudumba Unit).

இதில் நிவின் பாலி குடும்ப நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குள் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அந்த ஒரு பாட்டு உண்மையிலே கலங்கிவிட்டேன்.. அப்பாவுக்கு செய்த மரியாதை இதயம் முரளி படம் – அதர்வா!

நிவின்பாலியின் பெத்லகேம் குடும்பா யூனிட் ரிலீஸ் எப்போது:

இந்த பெத்லகேம் குடும்பா யூனிட் படமானது குடும்ப மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இதில் மமிதா லீட் நாயகியாக நடித்துவரும் நிலையில், இதன் மீது அதிக எதிர்பாப்புகள் இருந்துவருகிறது. குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்ணனிட்டு வெளியாகவுள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு பதிவை நடிகர் நிவின்பாலை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் 56 படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

நிவின் பாலி பகிர்ந்த பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலீஸ் தேதி குறித்த எக்ஸ் பதிவு:

ஓணம் பண்டிகையின் வெளியாகும் படங்கள் :

நிவின் பாலியின் பெத்லகேம் குடும்பா யூனிட் படமானது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இப்படத்துடன் சில படங்கள் வெளியாகவுள்ளதாம். நடிகர் துல்கர் சல்மான் கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பின் மலையாளத்தில் நடித்துள்ள படம் ஐ ஆம் கேம்.

இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ல் வெளியாகிறது. அதே போல நடிகர் பிரித்திவி சுகுமாரனின் கலீஃபா என்ற படமும் ஆகஸ்ட் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் மலையாள சினிமாவில் ஓணம் பண்டிகையில் மாபெரும் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.

Follow Us