சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க கோமதி பிரியா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai Serial Actress Salary: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சிறப்பான தொடர்களில் ஒன்றாக இருப்பதுதான் சிறகடிக்க ஆசை. இதில் மீனா என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர்தான் கோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது ஸ்டார் விஜய் டிவி (Star Vijay Tv). இந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு மிகவும் பேமஸ். இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. தற்போது மேலும் புதிதாக ஒண்ணா இருக்க கத்துக்கணும் (Onna Irukka Kathukanum) மற்றும் காதல் காதல் காதல் என்ற சீரியல்களை ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). இந்த சீரியல் 2023ம் ஆண்டில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வெளியிடப்பட்டவருகிறது.
இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் கோமதி பிரியா (Gomathi Priya). இவரே இந்த சீரியலின் கதாநாயகி. இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு நாள் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவின் சம்பளம்:
சிறகடிக்க ஆசை சீரியலில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நடித்துவருபவர் நடிகை கோமதி பிரியா. இவரின் மீனா என்ற கதாபாத்திரமானது இந்த சீரியலில் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிகர் வெற்றி வசந்த் நடித்துவருகிறார். இந்த சீரியலானது கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரபகைவருகிறது. இந்த சீரியலில் ஒரு நாள் நடிப்பதற்கு மட்டும் நடிகை கோமதி பிரியா கிட்டத்தட்ட ரூ 12,000 சம்பளமாக வாங்குகிறாராம்.
நடிகை கோமதி பிரியாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை கோமதி பிரியா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் சீரியலில் நடித்துவருகிறார். இவர் தற்போது சிறகடிக்க ஆசை மற்றும் ஈ புழையும் கண்டன்னு என்ற மலையாள சீரியலில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் சீரியல்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜிவிஎம் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… தொடங்கியது புதுப் படத்தின் ஷூட்டிங்!
மேலும் இவர் ஏற்கனவே சினிமாவிலும் நடித்துள்ளார். 2020ம் ஆண்டில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான வர்மா என்ற படத்தில் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பெரிதும் சினிமாவில் இவர் எதிலும் நடிக்கவில்லை. சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.