AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!

Sivakarthikeyan About Doctor Movie Cast Audition : கோலிவுட்டில் பிரபலமான ஹீரோவாக இருந்துவருபவர்தான் சிவகார்திகேயன். முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், டாக்டர் படத்தில் பிரியங்கா மோகனுக்கு நடந்த 4 மணிநேர இன்டெர்வியூ குறித்து கலகலப்பான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதுபற்றி விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!
சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jul 2026 08:32 AM IST

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் புது புது படங்கள் வெளியாகிவருகிறது. ஆரம்பத்தில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிவந்த இவர், பின் மெரினா (Marina) என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன் குறும்படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) முதல் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) வரை பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அந்த விதத்தில் இவருக்கு முதல் ரூ 100 கோடி படமாக அமைந்தது டாக்டர் (Doctor). இதை நெல்சன் திலீப்குமார் இயக்க, சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்தது. இப்படத்தின் மூலமாகவே பிரியங்கா மோகன் தமிழில் நாயகியாக அறிமுகமானார். முன்பு பேட்டி ஒன்றில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், டாக்டர் படத்திற்காக பிரியங்கா மோகனுக்கு நடந்த இன்டெர்வியூ குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: துப்பாக்கியில் விஜய்யின் தங்கையாக நடித்தவரா இது.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!

பிரியங்கா மோகன் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்:

அந்த நேர்காணலில் பேசுகையில், டாக்டர் படத்தின் நடிகர்கள் தேர்வின் பொறுப்பை இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் ஒப்படைத்தோம். அவர் வரும் எல்லா நடிகையிடமும் உங்களை பற்றி சொல்லுங்கள் என கேள்விகள் கேட்டிருந்தார். படத்தின் கதாபாத்திர தேர்விற்காக நெல்சன் திலீப்குமார் 5 நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ளவில்லை.

இதையும் படிங்க: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!

ஆனால் படத்தின் ஹீரோயின் தேர்விற்கு கிட்டத்தட்ட பல மணிநேரம் எடுத்துக்கொண்டார். அதுவும் பிரியங்கா மோகனுக்கு 4 மணி நேரத்திற்கு மேல் இன்டெர்வியூ நடைபெற்றிருந்தகத்து” என அதில் சிவகார்த்திகேயன் கலக்கலாக இதை பகிர்ந்திருந்தார்.

நடிகை பிரியங்கா மோகனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் காம்போ :

இதுவரை பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே இவரு படங்களில் இணைந்துஹ் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் டாக்டர் படத்திலும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் டான் படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். இந்த ஜோடி இணைந்து நடித்திருந்த இரு படங்களும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் இந்த காம்போ இணையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us