AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya47: தி ஒன் அரேவ்ஸ் ஸூன்.. சூர்யா47 பட ஷூட்டிங் நிறைவடைந்ததாக வெளியான வீடியோ!

Suriya47 shooting wrap: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் தி ஒன் என்று அழைக்கப்பட்டுவருபவர் சூர்யா. இவர் மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் இயக்கத்தில் புதிதாக நடித்துவந்த படம் சூர்யா47. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Suriya47: தி ஒன் அரேவ்ஸ் ஸூன்.. சூர்யா47 பட ஷூட்டிங் நிறைவடைந்ததாக வெளியான வீடியோ!
சூர்யா47 படப்பிடிப்பு நிறைவுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jul 2026 19:20 PM IST

தின் ஒன் என ரசிகர்களால் புகழப்பட்டுவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில், திமில், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இவர் இறுதியாக தமிழ் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu) என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த இப்படம், எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு, இயக்குநர் வெங்கி அட் லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) என்ற படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக காத்திருக்கிறது. இதை முடித்ததும் சரியாக உடனடியாக இணைந்திருந்த படம்தான் சூர்யா47 (Suriya47).

தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா இணைந்திருந்தார். இதன் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், கேரளா மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவந்தது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருப்பதாக படக்குழு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் ‘சீ யூ’ பட ஃபர்ஸ்ட் சைட் வீடியோ வெளியானது!

சூர்யா47 படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ பதிவு:

சூர்யா47 டைட்டில் ரிலீஸ்:

நடிகர் சூர்யாவின் 47வது படத்திற்கு தற்காலிகமாக சூர்யா47 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆக்ஷன், காமெடி மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். அந்த விதத்தில் இதன் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் 51வது பிறந்தநாளை வருகிறது. அதன் முன்னிட்டு ஜூலை 22ம் தேதியில் சூர்யாவின் படங்களின் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஜன நாயகன் படம் ஜூலை 23ல் வெளியாகிறது. அத விதத்தில் சூர்யா47 பட டைட்டில் ஜூலை 22ல் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சூர்யா 47 பட ரிலீஸ்:

சூர்யா 47 படத்தில், நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் மலையாள இளம் நடிகர் நஸ்லேன் இணைந்து நடித்துள்ளார். இதில் நடிகர் சூர்யா காமெடி மற்றும் டெரெர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்

இதை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, மலையாள இசையமைப்பாளர் சுஷீன் ஷ்யாம் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், இதன் ரிலீஸ் மீது மக்களின் ஆர்வம் திரும்பியுள்ளது. அதன்படி 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு இப்படம் வெளியாகி அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us