விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்
GV Prakash Kumar said Viswanath and Sons movie 2nd single will be released on Suriyas birthday | நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இருந்து 2-வது சிங்கிள் வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டில் முதலாவதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து உள்ளது.




விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது?
முன்னதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இருந்து பட்டாம்பூச்சி என்ற பாடல் வெளியானது. அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்த நிலையில் 2-வது சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தில் இரண்டாவது சிங்கிள் வருகின்ற சூர்யாவின் பிறந்த நாளான 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Suriya sir bday second single 😍 #vishwanathandsons ❤️ #VAS voice of #THEONE 🔥 …
— G.V.Prakash Kumar (@gvprakash) July 16, 2026
Also Read… சிக்மா படத்திற்கு பிறகுதான் நடிப்பு குறித்து யோசிப்பேன் – ஜேசன் சஞ்சய்