நடிகர் சூர்யா உடன் இணையும் பிரபல இயக்குநர்? வைரலாகும் தகவல்
Suriya and SS Rajamouli are currently in the initial stages of discussions | தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் அடுத்ததாக எந்த இயக்குநருடன் பணியாற்ற உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒரே ஒரு படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி வசூலிலும் கெத்து காட்டியது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள் அபடம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார்.
மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி தற்போது சூர்யா 47 என்று அழைக்கப்படும் அந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டில் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 48-வது படத்திற்காக பிரபல இயக்குநர் டி.ஜே.ஞானவேல் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.




நடிகர் சூர்யா உடன் இணையும் பிரபல இயக்குநர்?
இந்த நிலையில் நடிகர் சூர்யா அந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து எந்த எந்த இயக்குநர் உடன் பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி கருப்பு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர்கள் மற்றும் எதிர்காலத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் சூர்யா ஒரு புதிய அணுகுமுறையைக் கையாண்டு வருவதாகவும், குறிப்பாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கூட்டு முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோர் இணைவது குறித்து தற்போது ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.
Also Read… ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்? உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya – S.S. Rajamouli are currently in the initial stages of discussions .
Following the mega success of #Karuppu, Suriya is said to have adopted a fresh approach towards selecting directors and future projects, with a greater focus on high-impact collaborations.
Follow 👉… pic.twitter.com/YBmYNkltBj
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) July 14, 2026
Also Read… சூப்பர் ஹீரோ கதையில் சூப்பர் ஹிட் அடித்த மாவீரன் படம் மூன்று ஆண்டுகளைக் கடந்தது