சூப்பர் ஹீரோ கதையில் சூப்பர் ஹிட் அடித்த மாவீரன் படம் மூன்று ஆண்டுகளைக் கடந்தது
3 Years Of Maaveeran Movie | தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாவீரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சின்னத்திரையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன காலக்கட்டத்தில் ஒரு காமெடி நடிகராகவே நடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை மொத்தமாக 25 படங்கள் வெளியாகி உள்ளது. அந்த 25 படங்களில் பலப் படங்கள் அவருக்கு விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சேயோன். இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். நடிகர் கமல் ஹாசன் தயாரித்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலகி வருகின்றது.




சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் மூன்று ஆண்டுகளைக் கடந்தது:
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாவீரன். இயக்குநர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். பொலிட்டிகள் சூப்பர் ஹீரோ பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.
Also Read… பாடகி ஜானகியின் இறுதிச் சடங்கு இன்று .. மைசூரில் அரசு மரியாதையுடன் இறுதி பிரியாவிடை
மாவீரன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
3years of #Maaveeran
Overwhelmed and elated with all the edits and fan made designs!
Veeran makkalin/rasigargalin anbu mazhayil nenaigiran ❤️#3YearsOfMaaveeran #Mahaveerudu #Veeramaejeyam@Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #YogiBabu… pic.twitter.com/BMD86B6RR0— Shanthi Talkies (@ShanthiTalkies) July 14, 2026
Also Read… Jr. NTR: அந்த இயக்குநருடன் நேரடி தமிழ் படம் பண்ணனும் – ஜூனியர் என்டிஆர் ஓபன் டாக்!