Jr. NTR: அந்த இயக்குநருடன் நேரடி தமிழ் படம் பண்ணனும் – ஜூனியர் என்டிஆர் ஓபன் டாக்!
Jr. NTR's Tamil Debut Dream: தெலுங்கு சினிமாவில் லீட் நடிகராக இருந்துவருபவர் ஜூனியர் என்டிஆர். இவரின் நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து புது புது படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் முன்பு தேவரா பட நிகழ்ச்சியில், நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் ஜூனியர் என்டிஆர் (Jr.NTR). இவரின் நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து புது படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் வார் 2 (War 2). இப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில், அதிரடி ஆக்ஷன் மற்றும் பிரம்மாண்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. கடத்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதையடுத்து தற்போது இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில் டிராகன் (Dragon) என்ற படத்தில் நடித்துவருகிறார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் இது உருவாகிவருகிறது. அந்த விதத்தில் மேலும் திரிவிக்ரமுடன் காட் ஆப் வார் (God of War) என்ற படத்திலும் நடித்துவருகிறார். முன்பு தேவரா (Devara) படத்தின் தமிழ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஜூனியர் என்டிஆர், அதில் தமிழில் நேரடியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ரெட்ரோ படத்தில் நான் செய்ய விரும்பிய அனைத்தையும் செய்தேன் – சந்தோஷ் நாராயணன்




தமிழில் நடிக்க ஆசைப்படுவது குறித்து ஜூனியர் என்டிஆர் சொன்ன விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்டிஆரிடம், “தொகுப்பாளர் தொடர்ந்து தெலுங்கில் படம் நடிக்கிறீர்கள், எப்போது தமிழில் நேரடி படமாக நடிப்பீர்களா?” என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு உடனடியாக பதிலளித்திருந்த ஜூனியர் என்டிஆர், “இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு பிடித்த இயக்குநரிடம் கேட்டுக்கொள்கிறேன். வெற்றிமாறன் சார், ப்ளீஸ் என்னுடன் ஒரு படம் பண்ணுங்க. ஒரு நேரடி தமிழ் திரைப்படம் பண்ணலாம் சார், அந்த படத்தை தெலுங்கில் டப் பண்ணிக்கொள்ளலா”ம் என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
வெற்றிமாறன் குறித்து ஜூனியர் என்டிஆர் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், வார் ஆப் காட் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் கடவுள் முருகனின் கதையை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாம். இந்த படத்தின் அறிவிப்பின்போது, முருகனை வடக்கில் பிறந்தவர் என்று கூறி வாசகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: தனுஷின் தமிழ் முருகன் பட கதை இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
அதற்கு பதிலடி தரும் வகையில், தற்போது தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் தமிழ் முருகன் என்ற படம் படத்தின் அறிவிப்பில் தமிழ் முருகன் என டைட்டில் கொடுக்கப்பட்டு, “Son Of kottravai” என முருகனை தமிழ் கடவுள் என கூறுவதுபோன்ற போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.