AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: ஜூனியர் என்டிஆர் படத்துக்கு பதிலடி? – உருவாகிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் தமிழ் முருகன்!

Dhanush DxV Mystery Solved: தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் மற்றும் இயக்கத்திலும் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் தனுஷ் இணையும் புதிய திரைப்படம் குறித்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் தமிழ் கடவுள் முருகனாக தனுஷ் நடிக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Dhanush: ஜூனியர் என்டிஆர் படத்துக்கு பதிலடி? – உருவாகிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் தமிழ் முருகன்!
தனுஷின் தமிழ் முருகன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Jul 2026 22:07 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக தொடர்ந்து புது புது படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த படம்தான் கர (Kara). இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh raja) இயக்கத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் தனுஷ் லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் தனுஷிற்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்திற்கு பின் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் ஓம் (OM) என்ற படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்துவருகிறார்.

அந்த விதத்தில், சமீபத்தில் தனுஷ் DxV என்ற பெயர் தாங்கிய போஸ்டரை வெளியிட்டிருந்தார். இது தனுஷ் இயக்கம் அடுத்த படத்தின் அப்டேட்டா, அல்லது தனுஷ் V என்ற எழுத்து கொண்ட இயக்குநருடன் 57வது படத்தில் இணைகிறாரா? என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டுவந்தனர், அந்த ஆராய்விற்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது தனுஷ் இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் “தமிழ் முருகன்”  (THAMIZH MURUGAN) என்ற படத்தில் இணைந்துள்ளாராம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் எங்கு எப்போது நடைபெறும்? வைரலாகும் தகவல்

வெற்றிமாறனின் இயக்கத்தில் தமிழ் முருகன் என்ற படத்தில் இணைந்த தனுஷ் வெளியிட்ட பதிவு:

 

தமிழ் முருகன் படத்தில் இணைந்த தனுஷ் – வெற்றிமாறன் :

இந்த படமானது வரலாற்று திரைப்படமாக தயாராகவுள்ளதாம். இதில் தனுஷ் கொற்றவை மகன் தமிழ் முருகன் என்ற கதாபாத்திரமாக நடிக்கிறாராம். வெற்றிமாறன் இயக்க, தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இன்னும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகை தொடர்பான அறிவிப்புகள் இல்லை. இந்த அறிவிப்பு டீசரில் தனுஷ், புடைசூழ யானையின் மீது அமர்ந்திருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்துவரும் படங்கள் :

ஓம் படத்தை, ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துவருகிறது. இதில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சிறப்பாக உருவாகிவருகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், மாஸான பாடல்களும் உருவாகியுள்ளதாம்.

இதையும் படிங்க: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!

இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு இரு நாட்களுக்கு முன்பே ஜெயிலர் 2 படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாரி செல்வராஜுடன் புது படம், தமிழரசன் பச்சமுத்துடன் ஒரு படம், எச்.வினோத்துடன் புது படம் மற்றும் வெற்றிமாறனுடன் என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Follow Us