AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ramayana: ரன்பீர் கபூரின் ராமாயணா பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

Ramayana Movie Trailer Update: ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்பார்த்துவரும் பிரம்மாண்டமான திரைப்படம்தான் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் தயாராகிவரும் இப்படமானது இரு பாகங்களாக உருவாகிறது. இதில் ராமாயணா பாகம் 1 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ramayana: ரன்பீர் கபூரின் ராமாயணா பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!
ராமாயணா திரைப்பட டிரெய்லர் அப்டேட்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jul 2026 17:01 PM IST

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor). இவர் இறுதியாக அனிமல் (Animal) (2023) என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பணியாற்றிவரும் படம்தான் ராமாயணா (Ramayana). இப்படமானது இந்துக்களின் புராண கதையான ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்க, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இணைந்து தயாரித்துவருகிறார். இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகிவரும் நிலையில், இதில் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி (Sai Pallavi), ராவணனாக ராக்ஸ்டார் யாஷ் (Yash) போன்ற பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளியில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. அந்த விதத்தில், ராமாயணா பார்ட் 1 படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சாய் பல்லவி குறித்து தவறாக பரவும் தகவல் – வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி:

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ராமாயணா. இந்த படத்திற்கு பான் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஆஸ்கார் விருது வென்ற ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்கள். இதன் கிளிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், அதில் இவர்களின் இசை சிறப்பாக அமைந்திருந்தது என்படுத் குறிப்பிடத்தக்கது.

ராமாயணா பார்ட் 1 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வைரலாகும் பதிவு:

ராமாயணா பார்ட் 1 படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்:

அந்த விதத்தில், தற்போது இதன் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. ராமாயணா படத்திற்கு 2 ட்ரெய்லர் உள்ளதாம். இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரம்மாண்டமாக வெளியிட தயாராகியுள்ளதாம்.

இதையும் படிங்க: படங்களில் அந்த உடை எனக்கு சௌகரியமாக இல்லை – நடிகை காஜல் அகர்வால்

இந்த ட்ரெய்லர் ரிலீஸை படக்குழு பெரும் நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னிலையில் நடைபெறவுள்ளதாம். மேலும் இதில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி போன்ற பிரபலங்களும் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.

Follow Us